வலைப்பதித்தல் (blogging)

மின்னஞ்சல் (Email), இணையதளம் (Website), மின்மன்றம் (Forum), மடலாற்குழு (yahoogroups, msngroups) போன்ற தொழிற்நுட்பங்களை தெரிந்துக்கொண்டு இணையத்தில் சஞ்சரித்தவர்களுக்கு இந்நான்கு வசதிகளையும் ஒருங்கே அமைந்து weblog (blog) என்ற பெயரில் பயன்தருவது மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி.

கேள்விகள்:
மின்னஞ்சல் (Email) மூலம் நல்ல விஷயங்களை நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்பவராக நீங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் நண்பர் மின்னஞ்சலை வரவேற்கிறாரா? அவரை உங்கள் செய்தியினை பார்க்க தேடிவரவைக்க வேண்டாமா?

வலைப்பக்கம் (Website) செய்ய ஆசை இருந்து வெப் டிஸைன், வருடாந்திர ஹோஸ்டிங் செலவு, பராமரிப்பு என்று தண்டம் அழ வேண்டும் என்று நினைத்து முயற்சியை கைவிட்டவரா நீங்கள்?

மின்மன்றம் (Forum) சுதந்திரமான உங்கள் கருத்துக்களை மின்மன்றங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்று நினைக்கிறீர்களா?

மடலாற்குழு (Email groups) - கருத்துக்கான செய்திகளும் அது தொடர்பான நண்பர்களின் பதில்களும் ஒரே சொடுக்கில் பார்க்க முடிவதில்லை என்ற வருத்தமா உங்களுக்கு?

பதில்:
இத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வுதான் blogging.

இதனை தமிழில் வலைப்பூ, வலைப்பதிவு, குடில் என்று அழைத்தாலும், அதிகமானோர் வலைப்பதிவு என்றே வழங்கிவருகிறார்கள்.

கதை, கவிதைகள், கட்டுரைகள், ஆலோசனைகள், விமர்சனங்கள், அறிவியல், கணினி தொழிற்நுட்பம் போன்றவைகளை எழுத்தில் வார்த்திட அறிவுத்திறன் உங்களிடம் புதைந்து இருக்கலாம். இதையெல்லாம் நாளிதழுக்கோ வாரஇதழுக்கோ அனுப்பினால் பிரசுரிக்கப்படலாம். ஆனால் எப்பொழுது?

நீங்கள் எழுதிய அத்தனை விஷயங்களையும் அதுவும் அடுத்த வினாடியில் உலகத்தின் பல்வேறு பாகங்களுக்கு எடுத்துச்செல்ல முடியும் - செலவின்றி.

msn முதலாக எண்ணற்ற இணைய பக்கங்கள் இலவசமாகவே வலைப்பதிவு வசதியை தந்தாலும் தற்போதய நிலவரப்படி http://blogger.com தரும் வசதியே சிறந்ததாக உள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியது இரண்டே விஷங்கள்தான்
1) blogger.com இணையதளம் சென்று உங்களுக்கென்று ஒரு வலைப்பதிவை உருவாக்கி கொள்ள வேண்டியது.
தேவையானவை:
a)பயனர் பெயர் (user name)
b)பாஸ்வேர்ட் (Password)
c)முகவரி http://yourblogname.blogspot.com
d)வலைப்பதிவின் பெயர் - தமிழில் (blog name)
e)பெயர் விளக்கம் (Description)
f)மின்னஞ்சல் முகவரியை இணைப்பது

உபரியாக:
g) ஸ்கிரிப்ட் பகுதியில் ஆல்டர்நேடிவ் எழுத்துருக்களின் பெயர்களை font face-ல் இணைப்பது - இதனால் விண்டோஸ் 98-லும் குறிப்பிட்ட தேனீ போன்ற மற்ற யுனிகோடு எழுத்துருக்கள் அவர்களின் கணினியில் இருக்குமேயானால், இயங்கு எழுத்துரு இல்லாமலேயே பக்கத்தை படிக்க இயலும்.

அதற்கு டெம்ப்லேட் பகுதியில் உள்ள ஸ்கிரிப்ட்டில்

font-family:TheneeUniTx, Latha, TSCu_InaiMathi, TSCu_Amuthu, TSC_Avarangal;
என்பதை இணைக்க வேண்டும்.

h) விண்டோஸ் 98 உட்பட ஏனைய இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் இயங்கு தளத்தில் தேனீ போன்ற மற்ற எழுத்துருக்கள் இல்லாமலேயே தமது வலைப்பதிவை பார்வையிட வைக்கவேண்டுமானால், இயங்கு எழுத்துருக்கான ஸ்கிரிப்ட்ஐ இரண்டு Head-களுக்கு இடையில் இணைக்க வேண்டும்.



yoursitename என்பது, நீங்கள் எந்த தளத்தில் தேனீ இயங்கு எழுத்துருவை பதிவேற்றம் செய்திருக்கிறீர்களோ அத்தளத்தின் பெயர்.
உதாரணம்:

http://geocities.com/nihalvu/THENEE.eot

2) உங்களின் ஆக்கங்களை உலகத்தில் பல்வேறு பகுதியில் வசிக்கும் வாசகர்கள் படித்து கருத்துச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியவை:
a)பதிவுகள் செய்த பின்னர் கீழ்கண்ட தொடுப்பினை தட்டி உங்கள் வலைப்பதிவை தமிழ்மணம்.காம்-வுடன் இணைத்துவிடுங்கள்.

http://www.thamizmanam.com/tamilblogs/bloggers.php?action=submitted

blogger.com வலைப்பதிவு வழங்கும் திரட்டியின் முகவரி
http://yourblogname.blogspot.com/atom.xml
(இங்கு yourblogname என்பது blogspot என்ற பெயருக்கு முன் உள்ள உங்கள் வலைப்பதிவின் முகவரி)

b)தமிழ்மணம் இணையதளத்தில் உங்கள் வலைப்பதிவின் புதிய பதிவு விபரங்கள் திரட்டப்படுகிறது என்ற விபரமும் தொடுப்பும் தரக்கூடிய html ஸ்கிரிப்ட்டை டெம்ப்லேட் பகுதியில் இணைத்திடவேண்டும். உங்கள் வலைப்பதிவை தமிழ்மணத்துடன் இணைத்தபின்னர் இந்த செய்தியும் ஸ்கிரிப்ட்டும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படும்.

பயன்கள் மற்றும் வசதிகள்:
1) மின்னஞ்சல் அனுப்பும் அளவிற்கு இணைய அறிவு இருந்தால் போதுமானது
2) செலவு இல்லை. (இருக்கவே இருக்கிறது blogger.com போன்ற இலவச வலைப்பதிவு அளிப்பான்கள்)
3) வெப்மாஸ்டர் தேவையில்லை. (தேவையே இல்லை)
4) உங்கள் இஷ்டப்படி எப்பொழுது வேண்டுமானாலும் டிஸைன் மாற்றிக்கொள்ளலாம். இதனால் ஏற்கனவே பதிவு செய்த விஷயங்கள் அழிந்துவிடும் என்று கவலைப்பட வேண்டாம். புதிய பொழிவில் பழைய செய்திகளை பார்வையிட முடியும்.
5) ஒரே நாளில் பல பதிவுகளை செய்யலாம். ஒரு வாரம் செய்யாமலும் இருக்கலாம். இது உங்கள் சாய்ஸ்.
6) தொடர்வேலையின் காரணமாக எந்த செய்தியையும் பதிவு செய்ய முடியவில்லையே என்ற வருத்தமும் புதிய பதிவை உங்கள் நண்பர் பார்க்க வருவாரா என்ற சந்தேகமும் தேவையே இல்லை. (திரட்டி வசதியின் மூலம் உங்கள் நண்பர் தானாகவே புதிய பதிவை அறிந்துக்கொள்வார்)
7) எதை எழுதுவது? என்றாவது எழுதிவைக்கலாம். நீங்கள் விடுமுறையில் சென்ற செய்தியையும் தெரிவித்துவிடலாம்.
8) மறுமொழி கொடுக்க உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கிறார்கள். (எளிமையான மறுமொழி வசதி)
9) தன்னைப்பற்றி யாராவது எதையாவது திட்டி எழுதி வைத்துவிட்டால் என்ன செய்வது என நினைப்பவர்கள், மறுமொழி இட்ட செய்தியை மின்னஞ்சலின் மூலம் தமக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்திட முடியும். அல்லது மறுமொழி வசதியை நீக்கி விடலாம்.
10) எத்தனை பேர் படித்தார்கள் என்று (ஸ்டேட் கவுண்ட்டர் போன்ற இலவச சைட் கவுண்டர்களை உங்கள் வலைப்பதிவுடன் இணைத்து நாடு வாரியாக வருகையாளர்களை தெரிந்துக்கொள்ள முடியும்)
11) எழுத்தாளராக, விமர்சகராக உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும்.
12) எழுதிய தேதி, நேரம் கூட பதிவு செய்துக்கொள்ள முடியும்.
13) தேதிவாரியாக, மாதாவாரியாக எழுதியதை பிரித்து வைக்க முடியும். (Archive வசதி)
14) எல்லாவற்றிற்கும் மேலாக யுனிகோட் வசதியின் மூலம் எந்த எழுத்துரு பிரச்சினையும் இன்றி தமிழில் பதிவு செய்யமுடியும்.
15) படங்களை சேர்க்க முடியும். (இலவச இமேஜ் ஹோஸ்டிங் செய்ய Tinypic.com இருக்கிறது)
16) ஆல்டர்நேடிவ் எழுத்துருக்கள் மூலம் வலைப்பதிவை படிக்க வசதி செய்ய முடியும்.
17) மின்னஞ்சலின் மூலமும் செய்திகளை பதிவு செய்யமுடியும்.
18) ஒரே பயனர் பெயரில் பல உப வலைப்பதிவுகளை உருவாக்க முடியும்.
19) தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் நல்லதொரு புனைபெயரிலேயே கலக்கிட முடியும்.
20) வலைப்பூ முகவரியை மாற்றிக்கொள்ள இயலும். (பழைய செய்திகளுக்கு எந்த சேதமும் இல்லை)
21) தமிழ் தேதி, யுனிகோட் எழுத்துரு மாற்றி போன்றவைகளை இணைக்க முடியும்.

வலைப்பதிவாளர்கள் யாரேனும் உண்டா?
http://thamizmanam.com -ல் அகர வரிசையில் வலைப்பதிவாளர்களின் பெயர்கள் பட்டியளிடப்படுகின்றது (தமிழ்மணத்தில் பதிவு செய்தவர்கள் மட்டும்).

வலைப்பதிவு உலகத்தில் என்ன நடக்கிறது?
http://www.thamizmanam.com/tamilblogs/readers.php

வலைப்பதிவு உதவிகளுக்கு
http://www.thamizmanam.com/phBB2/index.php
http://groups.yahoo.com/group/tamilblogs

யுனிகோட் தட்டச்சு மென்பொருட்கள்
http://developer.thamizha.com/ekalappai
http://murasu.com
http://kstarsoft.com/

வெவ்வேறு தமிழ் எழுத்துருக்களை யுனிகோடாக மாற்ற
http://suratha.com/reader.htm

இலவச இமேஜ் ஹோஸ்டிங்
http://tinypic.com/

வருகையாளர்களை கணக்கிட
http://statcounter.com

Comments

Popular posts from this blog

யுனிகோடு உமர் அவர்களின் மறைவு

பாமினி to யுனிகோடு (சீர்மை)

மேலும் சில எழுத்துரு மாற்றிகள்