Posts

Showing posts from January, 2005

வலைப்பதிவில் எழுத்துரு மேம்பாடு

வலைப்பதிவிற்கு வரும் அனைத்து வாசகர்களுக்கும் ஏற்றவகையில் எழுத்துரு அமைப்பை வலைப்பதிவில் மேம்படுத்துவது நல்லது. இயங்கு எழுத்துரு உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு தேனீ இயங்கு எழுத்துருவை தன் வலைப்பதிவில் இணைத்தவர்களில் சிலர் டெம்ப்லேட் பகுதியில் உள்ள எழுத்துரு குடும்பத்தில் அதன்பெயரை குறிப்பிடாமல் மறந்துவிடுகிறார்கள். யாரெல்லாம் இயங்கு எழுத்துருவை தன் வலைப்பதிவுடன் இணைத்திருக்கிறார்களோ அவர்கள், இணைக்கப்பட்ட எழுத்துருவின் முழு பெயரை டெம்ப்லேட் பகுதியில் உள்ள font-family-ல் குறிப்பிட வேண்டும். உதாரணமாக: font-family: TheneeUniTx; சில அலுவலகங்களில் கணினி பாதுகாப்பிற்காக Geocities போன்ற தளங்களை பார்வையிட முடியாதபடி Firewall உதவிகொண்டு பூட்டிவிடுவதுண்டு. நம்மவர்கள் அதிகமானோர் இயங்கு எழுத்துருவை வைத்திருக்கும் இடம் அதுவே. இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க, குறிப்பிட்ட யுனிகோடு எழுத்துருவை எங்கிருந்து பதிவிறக்கம் செய்யலாம் (உதாரணமாக : Ezhilnila.com) என்பதை, Download Font என்ற சுட்டியை இணைத்து குறிப்பிடலாம். இயங்கு எழுத்துரு உபயோகிக்காதவர்கள் கவனத்திற்கு வின்டோஸ் 98-ஐ உபயோகிக்கும் வாசகர்கள் இண