Saturday, December 25, 2004

யுனிகோட் இணையதளம்

யுனிகோடு
உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் ஒர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமே யூனிகோட் ஆகும் இதில் சில இந்திய மொழிகளோடு தமிழுக்கென்றும் தனியிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நாம் இன்று பயன்படுத்தும் TSC TAB TAM போன்ற குறியீட்டு வேறுபாடுகளையெல்லாம் தவிர்த்து ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியதும் இந்த யூனிகோட் முறைதான். இந்த யூனிகோட் குறியீட்டின் மூலம் பதிக்கப்பட்ட கதைகளை கவிதைகளை கட்டுரைகளை நாம் Yahoo, google, MSN போன்ற தேடுதளங்களின் மூலம் தமிழிலேயே தேடுகின்ற வாய்ப்பும் நமக்கு கிடைத்திருக்கிறது இத்துடன் இத்தகுதரத்தை உலகிலுள்ள பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களாலும் அங்கீகரிக்க பட்டமையால் இதற்கு வளமான எதிர்காலமுண்டு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

இன்றைய நிலையில் யூனிகோட் குறியீட்டினை வின்டோஸ் 2000 மற்றும் வின்டோஸ் Xp இயங்கு தளங்களில் மட்டுமே எளிதாக பயன்படுத்த முடியும். வின்டோஸ் Xp- யுடன் லதா என்னும் யுனிகோடு எழுத்துருவும் சேர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ் யுனிகோட் எழுத்துருவினால் எழுதப்பட்ட பக்கங்களை எந்த பிரச்சினையுமின்றி படிக்க இயலும்.இணையத்தில் உலாவும்போது விண்டோஸ் 98-ல் இயங்குதளத்தில் உள்ள இண்டெர்நெட் எக்ஸ்புலோரர் 5.5 (அல்லது அதற்கு பிந்தைய வெளியீடு) இருந்தால் தமிழ் யுனிகோட் பக்கங்களை பார்வையிட முடியும். ஆனால் அப்பக்கத்திற்குறிய தமிழ் யுனிகோடு எழுத்துரு உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது இயங்கு எழுத்துருவாக அப்பக்கத்தில் (Webpage) இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இணையபக்கம்
21-ஆம் நூற்றாண்டில் எத்தனையோ தொலைதொடர்பு வசதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையெல்லாம் அனைத்து மனிதர்களும் பயன்படுத்துகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியே பயன்படுத்தினாலும் அதனை மனிதர்களுக்கு தீங்கு தரும் விஷயத்தில்தான் பயன்படுத்தி வருகிறோம். அந்த வரிசையில் இருப்பதுதான் இணையமும்.

மீடியாவின் யார் கையில் இருக்கிறதோ அவர்களே இந்த உலகத்தில் கொடிகட்டி பறக்கிறார்கள். தங்களின் கருத்துகளை சொல்வதற்க்கும், தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை உலகிற்கு அறிவிப்பதற்கும் மீடியாவை பயன்படுத்தி வெற்றி காண்கிறார்கள்.

யார் தகவல்தொடர்பு ஊடகங்களில் தமது பங்கினை ஆற்றி அத்தகைய ஊடகங்களை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவில்லையோ அந்த சமுதாயம் கேட்பாரின்றி பரிதவிக்கும் நிலையை அடையநேரிடும்.

மனிதனின் கல்வி, தகவல்தொடர்பு, வணிகம், ஆன்மீகம் போன்றவற்றின் மேம்பாட்டிற்காக இணையத்தை பயன்படுத்த முடியும். தமிழ் இணையதளம் அமைக்கும்போது தூரநோக்கு பார்வையுடன் சிந்திப்பவர்கள் யுனிகோடு எழுத்துருக்கள் பயன்படுத்தப்படும் இணையதளங்களையே விரும்புகிறார்கள். இதன் மூலம் எழுத்துரு பிரச்சினைகள் தவிர்க்கமுடியும்.

யுனிகோடு இணையதளத்தில் அதிகமானோர் உமர்தம்பி அவர்களின் தேனீ (TheneeUniTx.ttf) எழுத்துருவையே பயன்படுத்துகிறார்கள். தேனீ எழுத்துருவின் உயரமும் ஆங்கில எழுத்துருவின் உயரமும் ஒரே அளவு கொண்டது. இதனால் Line Space ஏற்ற இறக்கத்தினை தவிர்க்கலாம். இனி Microsoft Frontpage உதவியுடன் யுனிகோட் இணையபக்கம் தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

அ) உங்கள் html code பக்கத்தில் Properties click செய்து கீழ்கண்ட மாற்றங்களை செய்யுங்கள்:

1) Language : Tamil
2) Save the documents as : Unicode (UTF-8 )
3) Page reload : Reload the current documents as : என மாற்றிய பிறகு

இயங்கு எழுத்துரு
இன்னுமொரு நற்செய்தி, சகோதரர் உமர்தம்பி அவர்கள் அனைத்து இணையதளத்திலும் பயன்படுத்தும் விதமாக தேனீ (THENEE.eot) இயங்கு எழுத்துருவை Microsoft WEFT மென்பொருள் உதவியுடன் வடிவமைத்திருப்பதுதான். இதனால் இணையதளமோ வலைப்பதிவோ தொடங்கும்போது அதற்கென்று பிரத்யேகமாக இயங்கு எழுத்துருவை தயாரிக்க வேண்டியதில்லை.

இதில் இயங்கு எழுத்துருவின் பயன், விண்டோஸ் 98 போன்ற இயங்கு தளங்களில் யுனிகோடு எழுத்துரு இல்லாததால் அதனை பதிவிறக்கம் செய்யாமல் தமிழ்பக்கத்தை பார்வையிட முடியும். அதுமட்டுமல்லாமல் தேனீ எழுத்துருவின் வடிவம் உயரமும் ஆங்கில எழுத்துருவின் உயரம் சமஅளவு கொண்டது. இதனால் Line Space ஏற்ற இறக்கம் தவிர்க்கப்படுகிறது.3

ஆ) தேனீ இயங்கு எழுத்துருவை (size 45 kb) கீழ்கண்ட தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

http://www.islamkalvi.com/font/THENEE.eot

இ) உங்கள் இணையதளத்தில் ஏதேனுமொரு ·போல்டரை ஏற்படுத்தி தேனீ இயங்கு எழுத்துருவை சேமித்து வையுங்கள்.

உதாரணமாக: font/THENEE.eot

ஈ) ஸ்கிரிப்ட் (Code) பகுதிக்கு சென்று இரண்டு Head-களுக்கு இடையில் கீழ்கண்டவற்றை கவனமாக பேஸ்ட் செய்யுங்கள். இதில் yoursitename என்பது உங்கள் தளத்தின் பெயர் என்பதை மறந்துவிடவேண்டாம்.அவ்வளவுதான் இயங்கு எழுத்துருவுடன் கூடிய யுனிகோடு இணையதளம் தயார்.

இனி TheneeUniTx எழுத்துருவில் உங்கள் செய்திகளை தட்டச்சு செய்யுங்கள் அல்லது மாற்றி அமையுங்கள். அதாவது Font face - TheneeUniTx ஆக இருக்க வேண்டும். தேனீ எழுத்துருவில் தட்டச்சு செய்ய தேவையான TheneeUniTx.ttf எழுத்துருவை கீழ்கண்ட தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

http://www.islamkalvi.com/font/TheneeUniTx.ttf

இணையம் மற்றும் html ஸ்கிரிப்ட் போன்றவற்றின் அறிவை வளர்த்துக்கொள்ள கீழ்கண்ட தளத்திற்கு சென்று இது தொடர்பான பல கட்டுரைகளை படிக்கலாம்.

http://ezilnila.com/

எழுத்துரு மாற்றிகள்

a) பொங்குதமிழ் யுனிகோட் எழுத்துரு மாற்றி
ஏற்கனவே வெவ்வேறு வேறு எழுத்துருக்களில் தட்டச்சு செய்த செய்திகளை "பொங்குதமிழ்" யுனிகோட் எழுத்துரு மாற்றியின் மூலம் யுனிகோடுக்கு மாற்ற கீழ்கண்ட சுட்டியை தட்டுங்கள். மேலும் "பொங்குதமிழ் மாற்றி"யை உங்கள் கம்ப்யூட்டரிலேயே Save as போட்டு சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

http://www.suratha.com/reader.htm

இதில் பல்வேறு எழுத்துருக்களிலிருந்து யுனிகோடு தயாரிக்கும் முறையாகும். இங்கு உள்ளீடு எந்த எழுத்துருவாக இருந்தாலும் வெளியீடு யுனிகோடாகத்தான் இருக்கும்.

b) டிஸ்கி எழுத்துரு மாற்றிகள்
அ) நீங்கள் ஒரு மின்மன்றத்தில் உருப்பினராக விரும்புகிறீர்கள். அம்மன்றம் டிஸ்கி எழுத்துரு பயன்படுத்துகிறார்கள். ஆனால் உங்களுக்கு பாமினி விசைப்பலகை முறைதான் தெரியும் என்றால், கீழ்கண்ட எழுத்துரு மாற்றியை பயன்படுத்திக்கொள்ளவும்.

http://www.suratha.com/bamini2tsc.htm

முதல் கட்டத்தினுள் உங்களின் வார்த்தைகளை Paste செய்து Enter அல்லது Mouse பட்டனை தட்டுங்கள். இப்பொழுது இரண்டாவது கட்டத்தினுள் டிஸ்கி எழுத்துருவை காண்பீர்கள். பிறகு வழக்கமான காப்பி பேஸ்ட் சமாச்சாரம்தான்.

இந்த எழுத்துரு மாற்றியை பெற்றுக்கொள்ள நீங்கள் ஒவ்வொரு தடவையும் சுரதாவின் இணையதளத்திற்கு வரவேண்டிய அவசியம் இல்லை. இப்பக்கத்தில் நீங்கள் இருக்கும் போது Save as போட்டு உங்களின் Desktop-ல் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இணையத்தின் இணைப்பு இல்லாமலேயே வேலைசெய்யும்படி எழுத்துரு மாற்றியை வடிவமைத்திருக்கிறார்கள்.

சிலர் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவார்கள்.

உதாரணமாக:
அம்மா : ammaa
ஆடு : aadu

அதாவது தமிழ் தட்டச்சு பழக்கம் இல்லாதவர்கள் மட்டுமே இதைப்போல எழுதுவார்கள். முரசு அஞ்சலுடைய டிஸ்கி மென்பொருள் தங்க்லீஸ் பழக்கம் உள்ளவர்களுக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும்.

அதே சமயத்தில் இண்டெர்நெட் கஃபே மற்றும் நண்பர்களின் கம்ப்யூட்டரிலிருந்து ஓசி இணைய விஷிட் அடிப்பவர்களுக்கு, முரசு அஞ்சல் மென்பொருள் (size of a2kse_full is 2.4 MB) பொ¢தாக இருப்பதால் பதிவிறக்கம் செய்வது கடினமாக இருக்கலாம். அதற்கு கீழ்கண்ட ரொமானிஸ்டு டூ டிஸ்கி எழுத்துரு மாற்றியை பயன்படுத்தினால் இந்த பிரச்சினை நீங்கிவிடும்.

Romonised to Tscii font converter
http://www.jaffnalibrary.com/tools/Tsc.htm

நீங்கள் முதல் கட்டத்தினுள் ammaa என்று டைப் செய்தால் இரண்டாவது கட்டத்தினுள் அம்மா என்று தெரியும். பிறகு copy செய்து மன்றத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மற்ற எழுத்துருவை டிஸ்கி-க்கு மாற்றுவது எப்படி?
முதலில் பொங்குதமிழ் யுனிகோட் எழுத்துரு மாற்றியை (Pongku Tamil Unicode converter) பயன்படுத்தி முதலில் யுனிகோட் எழுத்துருவாக மாற்றுங்கள். பிறகு அதனை யுனிகோட் டு டிஸ்கி எழுத்துரு மாற்றியைப் (Unicode to Tscii converter) பயன்படுத்தி டிஸ்கி எழுத்துருவாக மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

Step 1: பொங்குதமிழ் யுனிகோட் எழுத்துரு மாற்றி
http://www.suratha.com/reader.htm

Step 2: யுனிகோட் டு டிஸ்கி எழுத்துரு மாற்றி
http://www.suratha.com/uni2tsc.htm
மேலும் விளக்கம் தேவைப்படுவோர் மட்டும் கீழ்கண்ட செய்தியை படியுங்கள்.

உதாரணமாக, நீங்கள் தாயகத்திற்கு திரும்பும் போது உங்கள் பாக்கெட்டுகளில் மீதி உள்ள வெளிநாட்டு கரன்சிகளை பயன்படுத்தி சாமான்கள் வாங்க இயலாது. எனவே, இந்திய ரூபாயாக மாற்றி பிறகு நமக்கு தேவைப்பட்ட கடைகளில் போய் சாமான்கள் வாங்கிக் கொள்கிறோம் அல்லவா, அதுபோலத்தான்.

இன்னும் பல்வேறு எழுத்துரு மாற்றிகளை கீழ்கண்ட தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்:
http://www.suratha.com/

எகலப்பை (ver.2.0)

எகலப்பை (ver.2.0) மூலம் யுனிகோட், டிஸ்கி எழுத்துருக்கள்

எங்கு கிடைக்கும்?
யுனிகோடில் தட்டச்சு செய்ய எகலப்பை version 2.0 மிக உதவியாகவும் எளிதாகவும் இருக்கும். டிஸ்கி மற்றும் யூனிகோட் என்கோடிங்களுக்கான அஞ்சல், பாமினி, தமிழ் நெட் 99 விசைப்பலகைகள் கீழ்கண்ட தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

அல்லது

http://www.developer.thamizha.com/ekalappai/

மேறிகூறிய தளத்தில் உங்களுக்கு தேவையான மென்பொருளை தேர்ந்தெடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்யுங்கள். இதன் அளவு ஏறக்குறைய 1.1 அல்லது 1.2 எம்.பி. மட்டுமே. ஏற்கனவே உங்களிடம் எ-கலப்பையின் பழைய பதிப்பு (Version 1.0) இருந்தால் முதலில் அதனை நீக்கியபிறகு, கம்ப்யூட்டரை Re-start செய்துவிட்டு புதிய பதிப்பை நிறுவுங்கள்.

நிறுவும்போது 3 தமிழ் யூனிகோட் எழுத்துருக்களும் உங்கள் எழுத்துரு ஃபோல்டரில் இறங்கிக்கொள்ளும்.

பாமினி விசைப்பலகை பயனாளர்களுக்கு ஓர் நற்செய்தி என்னவென்றால், பாமினி விசைப்பலகையை பயன்படுத்தி டிஸ்கி அல்லது யுனிகோட் எழுத்துருவை தட்டச்சு செய்யலாம் என்பதே.

தட்டச்சு செய்யும் முறை
எகலப்பை (version 2.0) விண்டோஸ் Xp பயன்படுத்துபவர்களுக்கு மிக இலகுவானது. எனவே விண்டோஸ் Xp இயங்குதளத்தில் நிறுவப்பட்ட Microsoft word, Frontpage-ல் நேரடியாக தட்டச்சு செய்யலாம்.

எ-கலப்பையை இயக்கிய பிறகு, Alt+1, Alt+2, Alt+3 (முறையே ஆங்கிலம், தமிழ் யுனிகோட், டிஸ்கி ஆகியவற்றின் மாற்று ஸ்விட்சுகளை) இயக்கி உங்கள் விருப்பத்திற்கு தட்டச்சு செய்யலாம்.

Microsoft word மற்றும் Microsoft Frontpage-ல் டிஸ்கி எழுத்துருவை டைப் செய்ய விரும்பினால், TSC_Avarangal-ஐ தேர்ந்தெடுத்து பிறகு இதற்குறிய விசையை இயக்கி தட்டச்சு செய்ய வேண்டும்.

Word pad, forum, Weblog போன்றவற்றில் இதற்கு அவசியம் இல்லை. நேரடியாக நீங்கள் விரும்பிய விசையை (Alt+1, Alt+2, Alt+3) தேர்ந்தெடுத்து தட்டச்சு செய்யலாம்.

பிரச்சினையும் தீர்வும்
யுனிகோடில் தட்டச்சு செய்யும் போது "ஹு, ஹூ, ஜு ஷு" போன்ற எழுத்துக்கள் தட்டச்சு விசைப்பலகையில் வராமல் போனால் Microsoft word மற்றும் Microsoft Frontpage-ல் "ஹ, ஜ, ஷ" போன்றவற்றை தட்டச்சு செய்தபின்னர் கீழ்கண்ட படிகளை உபயோகிங்கள்:

1. insert
2. symbol...
3. உங்களுக்கு தேவையான எழுத்துருவை Font என்ற இடத்தில் தேர்வு செய்யுங்கள்.
4. இப்பொழுது " ு, ூ " என்ற குறிகளை தேர்வு செய்து insert -ஐ கிளிக் செய்யுங்கள்.

யுனிகோட் எழுத்துரு உதவி

உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் ஒர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமே யூனிகோட் ஆகும் இதில் சில இந்திய மொழிகளோடு தமிழுக்கென்றும் தனியிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நாம் இன்று பயன்படுத்தும் TSC TAB TAM பொன்ற குறியீட்டு வேறுபாடுகளையெல்லாம் தவிர்த்து ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியதும் இந்த யூனிகோட் முறைதான் இந்த யூனிகோட் குறியீட்டின் மூலம் பதிக்கப்பட்ட கதைகளை கவிதைகளை கட்டுரைகளை நாம் Yahoo, google, MSN போன்ற தேடுதளங்களின் மூலம் தமிழிலேயே தேடுகின்ற வாய்ப்பும் நமக்கு கிடைத்திருக்கிறது இத்துடன் இத்தகுதரத்தை உலகிலுள்ள பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களாலும் அங்கீகரிக்க பட்டமையால் இதற்கு வளமான எதிர்காலமுண்டு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

இன்றைய நிலையில் யூனிகோட் குறியீட்டினை வின்டோஸ் 2000 மற்றும் வின்டோஸ் XP இயங்கு தளங்களில் மட்டுமே எளிதாக பயன்படுத்த முடியும்.

விண்டோஸ் 98-ல் இண்டெர்நெட் எக்ஸ்புலோரர் 5.5 (அல்லது அதற்கு பிந்தைய வெளியீடு) இருந்தால் யூனிகோட் எழுத்துருவை பார்வையிட முடியும். ஆனால் தமிழ் யுனிகோடு எழுத்துரு உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வாசகர்கள் யுனிகோடின் அவசியத்தை அறிந்துக்கொள்ள கீழ்கண்ட தளங்களில் விரிவாக படிக்கலாம்.
http://www.e-sangamam.com/unicode.asp
http://kasi.thamizmanam.com/index.php?itemid=77
http://www.ezilnila.com/

மொழி அனுசரனையை சேர்ப்பது எப்படி?
யூனிகோட் மூலம் தமிழ் எழுதும் முன் முதலில் மொழி அனுசரனையை அதாவது Language Supportஐ உங்கள் கணினியில் சேர்க்க வேண்டும் இதற்கு கீழ்காணும் முறையை பின்பற்றவும்

குறிப்பு மொழி அனுசரனையைச் சேர்க்கும் போது இயங்குதள குறுந்தட்டு அதாவது Operating System CD தேவைப்படும்

வின்டோஸ் 2000
Startஐ சொடுக்கி அதில் Settings என்ற பகுதியிலிருந்து Control Panelஐ தேர்வு செய்யவும்
இப்போது Regional Options என்பதை சொடுக்கவும் இதில் General என்ற பகுதிக்குச் சென்று அதில் Indic என்ற check boxஐ சொடுக்கிக் கொள்ளவும்.

பிறகு OK பொத்தானை அழுத்த இயங்குதள CDஐ உள்ளிடும்படி அறிவுருத்தப்படும் இப்போது தேவையானவற்றை பூர்த்தி செய்ய உங்கள் கணினியில் மொழி அனுசரனை சேர்க்கப்பட்டுவிடும்

வின்டோஸ் XP
Startஐ சொடுக்கி அதில் Control Panelஐ தேர்வு செய்யவும்
இப்போது Regional and Language Options என்பதை சொடுக்கவும்
இதில் Languages என்ற பகுதிக்குச் சென்று அதில் காணும் supplimental Language Support என்ற பகுதியில் உள்ள Install files for complex scripts and right to left language including Thai என்ற check boxஐ சொடுக்கிக் கொள்ளவும் பிறகு OK பொத்தானை அழுத்த இயங்குதள CDஐ உள்ளிடும்படி அறிவுருத்தப்படும் இபோது தேவையானவற்றை பூர்த்தி செய்ய உங்கள் கணினியில் மொழி அனுசரனை சேர்க்கப்பட்டுவிடும்

இன்டர்நெட் எக்ஸ்புலோரர்
இன்டர்நெட் எக்ஸ்புலொரரின் Toolsஐ சொடுக்கி Internet Options என்பதை தேர்வு செய்யவும் இப்பொது Fonts என்ற பொத்தானை சொடுக்கி Language Script என்ற பகுதியில் தமிழை தேர்வு செய்யவும் பிறகு web page Font என்ற பகுதியில் Latha என்ற எழுத்துருவைத் தேர்வு செய்து OK பொத்தான்களை சொடுக்கவும்.

யாகூமெயில்
யாகூமெயில் இணையத்தில் யூனிகோட் மூலம் தமிழில் மின்னஞ்சல் செய்ய Compose என்ற பகுதிக்குச் செல்லவும். இப்பொது Color and Graphics என்பதை தேர்வு செய்ய யாகூவின் compose பகுதியில் Rich Text Editor தோன்றும். அதில் யுனிகோடை உள்ளீடு செய்யலாம்.

ஹாட்மெயில்
ஹாட்மெயில் இணையத்தில் யூனிகோட் மூலம் தமிழில் மின்னஞ்சல் செய்ய New Messageஐ தேர்வு செய்யவும். இப்பொது Tools என்ற பகுதிக்குச் சென்று RIch Text Editor ON என்பதை தேர்வு செய்ய ஹாட்மெயிலின் compose பகுதியில் Rich Text Editor தோன்றும். அதில் யுனிகோடை உள்ளீடு செய்யலாம்.

அவுட்லுக் 97/98/2000 மற்றும் அவுட்லுக் எக்ஸ்பிரஸ்
அவுட்லுக்கில் யூனிகோட் மூலம் தமிழில் மின்னஞ்சல் செய்ய New Message-ஐ தேர்வு செய்யவும்
இப்பொது Format என்ற பகுதிக்குச் சென்று HTML என்பதை தேர்வு செய்யவும்
அதில் யுனிகோடை உள்ளீடு செய்யலாம்.

(நன்றி: குறல் தமிழ் செயலி version 3.0)
http://kstarsoft.com/

வலைப்பதித்தல் (blogging)

மின்னஞ்சல் (Email), இணையதளம் (Website), மின்மன்றம் (Forum), மடலாற்குழு (yahoogroups, msngroups) போன்ற தொழிற்நுட்பங்களை தெரிந்துக்கொண்டு இணையத்தில் சஞ்சரித்தவர்களுக்கு இந்நான்கு வசதிகளையும் ஒருங்கே அமைந்து weblog (blog) என்ற பெயரில் பயன்தருவது மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி.

கேள்விகள்:
மின்னஞ்சல் (Email) மூலம் நல்ல விஷயங்களை நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்பவராக நீங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் நண்பர் மின்னஞ்சலை வரவேற்கிறாரா? அவரை உங்கள் செய்தியினை பார்க்க தேடிவரவைக்க வேண்டாமா?

வலைப்பக்கம் (Website) செய்ய ஆசை இருந்து வெப் டிஸைன், வருடாந்திர ஹோஸ்டிங் செலவு, பராமரிப்பு என்று தண்டம் அழ வேண்டும் என்று நினைத்து முயற்சியை கைவிட்டவரா நீங்கள்?

மின்மன்றம் (Forum) சுதந்திரமான உங்கள் கருத்துக்களை மின்மன்றங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்று நினைக்கிறீர்களா?

மடலாற்குழு (Email groups) - கருத்துக்கான செய்திகளும் அது தொடர்பான நண்பர்களின் பதில்களும் ஒரே சொடுக்கில் பார்க்க முடிவதில்லை என்ற வருத்தமா உங்களுக்கு?

பதில்:
இத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வுதான் blogging.

இதனை தமிழில் வலைப்பூ, வலைப்பதிவு, குடில் என்று அழைத்தாலும், அதிகமானோர் வலைப்பதிவு என்றே வழங்கிவருகிறார்கள்.

கதை, கவிதைகள், கட்டுரைகள், ஆலோசனைகள், விமர்சனங்கள், அறிவியல், கணினி தொழிற்நுட்பம் போன்றவைகளை எழுத்தில் வார்த்திட அறிவுத்திறன் உங்களிடம் புதைந்து இருக்கலாம். இதையெல்லாம் நாளிதழுக்கோ வாரஇதழுக்கோ அனுப்பினால் பிரசுரிக்கப்படலாம். ஆனால் எப்பொழுது?

நீங்கள் எழுதிய அத்தனை விஷயங்களையும் அதுவும் அடுத்த வினாடியில் உலகத்தின் பல்வேறு பாகங்களுக்கு எடுத்துச்செல்ல முடியும் - செலவின்றி.

msn முதலாக எண்ணற்ற இணைய பக்கங்கள் இலவசமாகவே வலைப்பதிவு வசதியை தந்தாலும் தற்போதய நிலவரப்படி http://blogger.com தரும் வசதியே சிறந்ததாக உள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியது இரண்டே விஷங்கள்தான்
1) blogger.com இணையதளம் சென்று உங்களுக்கென்று ஒரு வலைப்பதிவை உருவாக்கி கொள்ள வேண்டியது.
தேவையானவை:
a)பயனர் பெயர் (user name)
b)பாஸ்வேர்ட் (Password)
c)முகவரி http://yourblogname.blogspot.com
d)வலைப்பதிவின் பெயர் - தமிழில் (blog name)
e)பெயர் விளக்கம் (Description)
f)மின்னஞ்சல் முகவரியை இணைப்பது

உபரியாக:
g) ஸ்கிரிப்ட் பகுதியில் ஆல்டர்நேடிவ் எழுத்துருக்களின் பெயர்களை font face-ல் இணைப்பது - இதனால் விண்டோஸ் 98-லும் குறிப்பிட்ட தேனீ போன்ற மற்ற யுனிகோடு எழுத்துருக்கள் அவர்களின் கணினியில் இருக்குமேயானால், இயங்கு எழுத்துரு இல்லாமலேயே பக்கத்தை படிக்க இயலும்.

அதற்கு டெம்ப்லேட் பகுதியில் உள்ள ஸ்கிரிப்ட்டில்

font-family:TheneeUniTx, Latha, TSCu_InaiMathi, TSCu_Amuthu, TSC_Avarangal;
என்பதை இணைக்க வேண்டும்.

h) விண்டோஸ் 98 உட்பட ஏனைய இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் இயங்கு தளத்தில் தேனீ போன்ற மற்ற எழுத்துருக்கள் இல்லாமலேயே தமது வலைப்பதிவை பார்வையிட வைக்கவேண்டுமானால், இயங்கு எழுத்துருக்கான ஸ்கிரிப்ட்ஐ இரண்டு Head-களுக்கு இடையில் இணைக்க வேண்டும்.yoursitename என்பது, நீங்கள் எந்த தளத்தில் தேனீ இயங்கு எழுத்துருவை பதிவேற்றம் செய்திருக்கிறீர்களோ அத்தளத்தின் பெயர்.
உதாரணம்:

http://geocities.com/nihalvu/THENEE.eot

2) உங்களின் ஆக்கங்களை உலகத்தில் பல்வேறு பகுதியில் வசிக்கும் வாசகர்கள் படித்து கருத்துச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியவை:
a)பதிவுகள் செய்த பின்னர் கீழ்கண்ட தொடுப்பினை தட்டி உங்கள் வலைப்பதிவை தமிழ்மணம்.காம்-வுடன் இணைத்துவிடுங்கள்.

http://www.thamizmanam.com/tamilblogs/bloggers.php?action=submitted

blogger.com வலைப்பதிவு வழங்கும் திரட்டியின் முகவரி
http://yourblogname.blogspot.com/atom.xml
(இங்கு yourblogname என்பது blogspot என்ற பெயருக்கு முன் உள்ள உங்கள் வலைப்பதிவின் முகவரி)

b)தமிழ்மணம் இணையதளத்தில் உங்கள் வலைப்பதிவின் புதிய பதிவு விபரங்கள் திரட்டப்படுகிறது என்ற விபரமும் தொடுப்பும் தரக்கூடிய html ஸ்கிரிப்ட்டை டெம்ப்லேட் பகுதியில் இணைத்திடவேண்டும். உங்கள் வலைப்பதிவை தமிழ்மணத்துடன் இணைத்தபின்னர் இந்த செய்தியும் ஸ்கிரிப்ட்டும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படும்.

பயன்கள் மற்றும் வசதிகள்:
1) மின்னஞ்சல் அனுப்பும் அளவிற்கு இணைய அறிவு இருந்தால் போதுமானது
2) செலவு இல்லை. (இருக்கவே இருக்கிறது blogger.com போன்ற இலவச வலைப்பதிவு அளிப்பான்கள்)
3) வெப்மாஸ்டர் தேவையில்லை. (தேவையே இல்லை)
4) உங்கள் இஷ்டப்படி எப்பொழுது வேண்டுமானாலும் டிஸைன் மாற்றிக்கொள்ளலாம். இதனால் ஏற்கனவே பதிவு செய்த விஷயங்கள் அழிந்துவிடும் என்று கவலைப்பட வேண்டாம். புதிய பொழிவில் பழைய செய்திகளை பார்வையிட முடியும்.
5) ஒரே நாளில் பல பதிவுகளை செய்யலாம். ஒரு வாரம் செய்யாமலும் இருக்கலாம். இது உங்கள் சாய்ஸ்.
6) தொடர்வேலையின் காரணமாக எந்த செய்தியையும் பதிவு செய்ய முடியவில்லையே என்ற வருத்தமும் புதிய பதிவை உங்கள் நண்பர் பார்க்க வருவாரா என்ற சந்தேகமும் தேவையே இல்லை. (திரட்டி வசதியின் மூலம் உங்கள் நண்பர் தானாகவே புதிய பதிவை அறிந்துக்கொள்வார்)
7) எதை எழுதுவது? என்றாவது எழுதிவைக்கலாம். நீங்கள் விடுமுறையில் சென்ற செய்தியையும் தெரிவித்துவிடலாம்.
8) மறுமொழி கொடுக்க உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கிறார்கள். (எளிமையான மறுமொழி வசதி)
9) தன்னைப்பற்றி யாராவது எதையாவது திட்டி எழுதி வைத்துவிட்டால் என்ன செய்வது என நினைப்பவர்கள், மறுமொழி இட்ட செய்தியை மின்னஞ்சலின் மூலம் தமக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்திட முடியும். அல்லது மறுமொழி வசதியை நீக்கி விடலாம்.
10) எத்தனை பேர் படித்தார்கள் என்று (ஸ்டேட் கவுண்ட்டர் போன்ற இலவச சைட் கவுண்டர்களை உங்கள் வலைப்பதிவுடன் இணைத்து நாடு வாரியாக வருகையாளர்களை தெரிந்துக்கொள்ள முடியும்)
11) எழுத்தாளராக, விமர்சகராக உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும்.
12) எழுதிய தேதி, நேரம் கூட பதிவு செய்துக்கொள்ள முடியும்.
13) தேதிவாரியாக, மாதாவாரியாக எழுதியதை பிரித்து வைக்க முடியும். (Archive வசதி)
14) எல்லாவற்றிற்கும் மேலாக யுனிகோட் வசதியின் மூலம் எந்த எழுத்துரு பிரச்சினையும் இன்றி தமிழில் பதிவு செய்யமுடியும்.
15) படங்களை சேர்க்க முடியும். (இலவச இமேஜ் ஹோஸ்டிங் செய்ய Tinypic.com இருக்கிறது)
16) ஆல்டர்நேடிவ் எழுத்துருக்கள் மூலம் வலைப்பதிவை படிக்க வசதி செய்ய முடியும்.
17) மின்னஞ்சலின் மூலமும் செய்திகளை பதிவு செய்யமுடியும்.
18) ஒரே பயனர் பெயரில் பல உப வலைப்பதிவுகளை உருவாக்க முடியும்.
19) தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் நல்லதொரு புனைபெயரிலேயே கலக்கிட முடியும்.
20) வலைப்பூ முகவரியை மாற்றிக்கொள்ள இயலும். (பழைய செய்திகளுக்கு எந்த சேதமும் இல்லை)
21) தமிழ் தேதி, யுனிகோட் எழுத்துரு மாற்றி போன்றவைகளை இணைக்க முடியும்.

வலைப்பதிவாளர்கள் யாரேனும் உண்டா?
http://thamizmanam.com -ல் அகர வரிசையில் வலைப்பதிவாளர்களின் பெயர்கள் பட்டியளிடப்படுகின்றது (தமிழ்மணத்தில் பதிவு செய்தவர்கள் மட்டும்).

வலைப்பதிவு உலகத்தில் என்ன நடக்கிறது?
http://www.thamizmanam.com/tamilblogs/readers.php

வலைப்பதிவு உதவிகளுக்கு
http://www.thamizmanam.com/phBB2/index.php
http://groups.yahoo.com/group/tamilblogs

யுனிகோட் தட்டச்சு மென்பொருட்கள்
http://developer.thamizha.com/ekalappai
http://murasu.com
http://kstarsoft.com/

வெவ்வேறு தமிழ் எழுத்துருக்களை யுனிகோடாக மாற்ற
http://suratha.com/reader.htm

இலவச இமேஜ் ஹோஸ்டிங்
http://tinypic.com/

வருகையாளர்களை கணக்கிட
http://statcounter.com