Posts

Showing posts from December, 2004

யுனிகோட் இணையதளம்

Image
யுனிகோடு உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் ஒர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமே யூனிகோட் ஆகும் இதில் சில இந்திய மொழிகளோடு தமிழுக்கென்றும் தனியிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாம் இன்று பயன்படுத்தும் TSC TAB TAM போன்ற குறியீட்டு வேறுபாடுகளையெல்லாம் தவிர்த்து ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியதும் இந்த யூனிகோட் முறைதான். இந்த யூனிகோட் குறியீட்டின் மூலம் பதிக்கப்பட்ட கதைகளை கவிதைகளை கட்டுரைகளை நாம் Yahoo, google, MSN போன்ற தேடுதளங்களின் மூலம் தமிழிலேயே தேடுகின்ற வாய்ப்பும் நமக்கு கிடைத்திருக்கிறது இத்துடன் இத்தகுதரத்தை உலகிலுள்ள பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களாலும் அங்கீகரிக்க பட்டமையால் இதற்கு வளமான எதிர்காலமுண்டு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இன்றைய நிலையில் யூனிகோட் குறியீட்டினை வின்டோஸ் 2000 மற்றும் வின்டோஸ் Xp இயங்கு தளங்களில் மட்டுமே எளிதாக பயன்படுத்த முடியும். வின்டோஸ் Xp- யுடன் லதா என்னும் யுனிகோடு எழுத்துருவும் சேர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ் யுனிகோட் எழுத்துருவினால் எழுதப்பட்ட பக்கங்களை எந

எழுத்துரு மாற்றிகள்

a) பொங்குதமிழ் யுனிகோட் எழுத்துரு மாற்றி ஏற்கனவே வெவ்வேறு வேறு எழுத்துருக்களில் தட்டச்சு செய்த செய்திகளை "பொங்குதமிழ்" யுனிகோட் எழுத்துரு மாற்றியின் மூலம் யுனிகோடுக்கு மாற்ற கீழ்கண்ட சுட்டியை தட்டுங்கள். மேலும் "பொங்குதமிழ் மாற்றி"யை உங்கள் கம்ப்யூட்டரிலேயே Save as போட்டு சேமித்து வைத்து பயன்படுத்தலாம். http://www.suratha.com/reader.htm இதில் பல்வேறு எழுத்துருக்களிலிருந்து யுனிகோடு தயாரிக்கும் முறையாகும். இங்கு உள்ளீடு எந்த எழுத்துருவாக இருந்தாலும் வெளியீடு யுனிகோடாகத்தான் இருக்கும். b) டிஸ்கி எழுத்துரு மாற்றிகள் அ) நீங்கள் ஒரு மின்மன்றத்தில் உருப்பினராக விரும்புகிறீர்கள். அம்மன்றம் டிஸ்கி எழுத்துரு பயன்படுத்துகிறார்கள். ஆனால் உங்களுக்கு பாமினி விசைப்பலகை முறைதான் தெரியும் என்றால், கீழ்கண்ட எழுத்துரு மாற்றியை பயன்படுத்திக்கொள்ளவும். http://www.suratha.com/bamini2tsc.htm முதல் கட்டத்தினுள் உங்களின் வார்த்தைகளை Paste செய்து Enter அல்லது Mouse பட்டனை தட்டுங்கள். இப்பொழுது இரண்டாவது கட்டத்தினுள் டிஸ்கி எழுத்துருவை காண்பீர்கள். பிறகு வழக்கமான காப்பி பேஸ்ட் சமாச

எகலப்பை (ver.2.0)

எகலப்பை (ver.2.0) மூலம் யுனிகோட், டிஸ்கி எழுத்துருக்கள் எங்கு கிடைக்கும்? யுனிகோடில் தட்டச்சு செய்ய எகலப்பை version 2.0 மிக உதவியாகவும் எளிதாகவும் இருக்கும். டிஸ்கி மற்றும் யூனிகோட் என்கோடிங்களுக்கான அஞ்சல், பாமினி, தமிழ் நெட் 99 விசைப்பலகைகள் கீழ்கண்ட தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3 அல்லது http://www.developer.thamizha.com/ekalappai/ மேறிகூறிய தளத்தில் உங்களுக்கு தேவையான மென்பொருளை தேர்ந்தெடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்யுங்கள். இதன் அளவு ஏறக்குறைய 1.1 அல்லது 1.2 எம்.பி. மட்டுமே. ஏற்கனவே உங்களிடம் எ-கலப்பையின் பழைய பதிப்பு (Version 1.0) இருந்தால் முதலில் அதனை நீக்கியபிறகு, கம்ப்யூட்டரை Re-start செய்துவிட்டு புதிய பதிப்பை நிறுவுங்கள். நிறுவும்போது 3 தமிழ் யூனிகோட் எழுத்துருக்களும் உங்கள் எழுத்துரு ஃபோல்டரில் இறங்கிக்கொள்ளும். பாமினி விசைப்பலகை பயனாளர்களுக்கு ஓர் நற்செய்தி என்னவென்றால், பாமினி விசைப்பலகையை பயன்படுத்தி டிஸ்கி அல்லது யுனிகோட் எழுத்துருவை தட்டச்சு செய்யலாம் என்பதே. தட்டச்சு

யுனிகோட் எழுத்துரு உதவி

உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் ஒர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமே யூனிகோட் ஆகும் இதில் சில இந்திய மொழிகளோடு தமிழுக்கென்றும் தனியிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாம் இன்று பயன்படுத்தும் TSC TAB TAM பொன்ற குறியீட்டு வேறுபாடுகளையெல்லாம் தவிர்த்து ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியதும் இந்த யூனிகோட் முறைதான் இந்த யூனிகோட் குறியீட்டின் மூலம் பதிக்கப்பட்ட கதைகளை கவிதைகளை கட்டுரைகளை நாம் Yahoo, google, MSN போன்ற தேடுதளங்களின் மூலம் தமிழிலேயே தேடுகின்ற வாய்ப்பும் நமக்கு கிடைத்திருக்கிறது இத்துடன் இத்தகுதரத்தை உலகிலுள்ள பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களாலும் அங்கீகரிக்க பட்டமையால் இதற்கு வளமான எதிர்காலமுண்டு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இன்றைய நிலையில் யூனிகோட் குறியீட்டினை வின்டோஸ் 2000 மற்றும் வின்டோஸ் XP இயங்கு தளங்களில் மட்டுமே எளிதாக பயன்படுத்த முடியும். விண்டோஸ் 98-ல் இண்டெர்நெட் எக்ஸ்புலோரர் 5.5 (அல்லது அதற்கு பிந்தைய வெளியீடு) இருந்தால் யூனிகோட் எழுத்துருவை பார்வையிட முடியும். ஆனால் தமிழ் யுனிகோடு எழுத்து

வலைப்பதித்தல் (blogging)

Image
மின்னஞ்சல் (Email), இணையதளம் (Website), மின்மன்றம் (Forum), மடலாற்குழு (yahoogroups, msngroups) போன்ற தொழிற்நுட்பங்களை தெரிந்துக்கொண்டு இணையத்தில் சஞ்சரித்தவர்களுக்கு இந்நான்கு வசதிகளையும் ஒருங்கே அமைந்து weblog (blog) என்ற பெயரில் பயன்தருவது மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி. கேள்விகள்: மின்னஞ்சல் (Email) மூலம் நல்ல விஷயங்களை நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்பவராக நீங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் நண்பர் மின்னஞ்சலை வரவேற்கிறாரா? அவரை உங்கள் செய்தியினை பார்க்க தேடிவரவைக்க வேண்டாமா? வலைப்பக்கம் (Website) செய்ய ஆசை இருந்து வெப் டிஸைன், வருடாந்திர ஹோஸ்டிங் செலவு, பராமரிப்பு என்று தண்டம் அழ வேண்டும் என்று நினைத்து முயற்சியை கைவிட்டவரா நீங்கள்? மின்மன்றம் (Forum) சுதந்திரமான உங்கள் கருத்துக்களை மின்மன்றங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்று நினைக்கிறீர்களா? மடலாற்குழு (Email groups) - கருத்துக்கான செய்திகளும் அது தொடர்பான நண்பர்களின் பதில்களும் ஒரே சொடுக்கில் பார்க்க முடிவதில்லை என்ற வருத்தமா உங்களுக்கு? பதில்: இத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வுதான் blogging. இதனை தமிழில் வலைப்பூ, வலைப்பதிவு, குடில் என