Posts

Showing posts from June, 2005

மேலும் சில எழுத்துரு மாற்றிகள்

1. மேற்கோள்குறிகள் (inverted comma) சீர்மை ஆரம்பம் மற்றும் இறுதி குறியீடுகள் தட்டச்சு செய்த இடங்களில் "பெட்டி, பெட்டியாக" காட்சி தந்தாலும் தொடராக எழுதப்பட்ட மூன்று புள்ளிகள் (...) வேறு எழுத்தாக உங்கள் இணைய உலாவியல் காட்சி தந்தாலும், உங்கள் செய்திகளை இங்கு இட்டு சீரமைத்துக்கொள்ளுங்கள். திஸ்கி ( Tscii ) எழுத்துருக்களில் தட்டச்சு செய்தவைகளை யுனிகோடு எழுத்துருவில் மாற்றும்போது இப்பிரச்சினை வரலாம். குமுதத்திலிருந்து மாற்றியமைக்கப்பட்டவையும் இதுபோல பிரச்சினைகளுக்கு ஆட்படுவதுண்டு. அதாவது பிரத்யேக மேற்கோள்குறிகளை கண்டுபிடித்து அதற்கு பதிலாக சாதாரண மேற்கோள்குறிகளை இடும் பணிகளை இந்த மாற்றி ( Converter ) செய்யும். பிளாக்கர் வலைப்பதிவுகளில் உள்ள மேற்கண்ட செய்திகளை சீரமைக்க, Edit --> html mode (do not use compose mode) பகுதிக்குச் சென்று, அங்குள்ள செய்திகளை முதல்பெட்டியில் இட்டு Enter-ஐ தட்டி, பிறகு இரண்டாவது பெட்டியில் தெரியும் செய்திகளை மீண்டும் பழைய இடத்தில் Paste செய்துக்கொள்ளுங்கள். எழுத்துகள் மற்றும் Script ஆகியவற்றிற்கு எந்த பாதிப்பும் வராது. Inverted comma correction