Posts

Showing posts from 2005

மேலும் சில எழுத்துரு மாற்றிகள்

1. மேற்கோள்குறிகள் (inverted comma) சீர்மை ஆரம்பம் மற்றும் இறுதி குறியீடுகள் தட்டச்சு செய்த இடங்களில் "பெட்டி, பெட்டியாக" காட்சி தந்தாலும் தொடராக எழுதப்பட்ட மூன்று புள்ளிகள் (...) வேறு எழுத்தாக உங்கள் இணைய உலாவியல் காட்சி தந்தாலும், உங்கள் செய்திகளை இங்கு இட்டு சீரமைத்துக்கொள்ளுங்கள். திஸ்கி ( Tscii ) எழுத்துருக்களில் தட்டச்சு செய்தவைகளை யுனிகோடு எழுத்துருவில் மாற்றும்போது இப்பிரச்சினை வரலாம். குமுதத்திலிருந்து மாற்றியமைக்கப்பட்டவையும் இதுபோல பிரச்சினைகளுக்கு ஆட்படுவதுண்டு. அதாவது பிரத்யேக மேற்கோள்குறிகளை கண்டுபிடித்து அதற்கு பதிலாக சாதாரண மேற்கோள்குறிகளை இடும் பணிகளை இந்த மாற்றி ( Converter ) செய்யும். பிளாக்கர் வலைப்பதிவுகளில் உள்ள மேற்கண்ட செய்திகளை சீரமைக்க, Edit --> html mode (do not use compose mode) பகுதிக்குச் சென்று, அங்குள்ள செய்திகளை முதல்பெட்டியில் இட்டு Enter-ஐ தட்டி, பிறகு இரண்டாவது பெட்டியில் தெரியும் செய்திகளை மீண்டும் பழைய இடத்தில் Paste செய்துக்கொள்ளுங்கள். எழுத்துகள் மற்றும் Script ஆகியவற்றிற்கு எந்த பாதிப்பும் வராது. Inverted comma correction

பாமினி to யுனிகோடு (சீர்மை)

Bamini/Sarukesi to Unicode (improved version) பாமினி, சாருகேசி, ரோஜா, சரஸ்வதி, தென்றல், அருவி, ஃபிர்தவ்ஸ், ஜாஸ்மின், சிங்காரம் இன்னும் இதனை ஒத்த பல்வேறு எழுத்துருக்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை யுனிகோடில் மாற்றும்போது ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்துள்ளேன். முக்கியமாக கமா(,) பிரச்சினை இனி இருக்காது. இந்த எழுத்துரு மாற்றிக்கு முன்னோடி நண்பர் சுரதா என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இனி மேலும் பல பாமினி/சாருகேசி எழுத்துரு இணையதளங்கள் யுனிகோடு இணையதளமாக மாற்றம் அடையும் என்று நம்பலாம். கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி எழுத்துருமாற்றியை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் கணினியிலேயே சேமித்தும் பயன்படுத்திக்கொள்ளலாம். இணையதளங்களில் இறக்கி மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். bamini2unicode (Cheermai) இப்புதிய எழுத்துரு மாற்றியின் பயனை அறிந்துக்கொள்ள, கீழ்கண்ட வரியை தனியே இட்டு பாமினி அல்லது சாருகேசி எழுத்துருவாக மாற்றுங்கள். விடை சரியாக வருகிறதா? cs;@hpy;> 'g+l;L"> mt;t+L> ah`{> [{yp> ]{> m/J விடை: உள்ளூரில், 'பூட்டு', அவ்வூடு, யாஹு, ஜுலி, ஸு, அஃது பாமினி/சாருகே

ஜிமெயில்

சோதனைச்சுற்றுக்காக கூகில் (Google) நிறுவனம் அளிக்கும் இலவச ஜிமெயில் (Gmail) மின்னஞ்சல் கணக்கை, மற்ற இலவச மின்னஞ்சல்களைப் போல் பெற்றுவிட முடியாது. தற்போது ஜிமெயிலை உபயோகிக்கும் ஒருவர் உங்களுக்கு அழைப்பு (Invitation) கொடுத்தால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், அவ்வாறு அழைப்பு கொடுப்பதற்கான தகுதியும் அவர் பெற்றிருக்க வேண்டும். பிளாக்கர் ( blogger.com ) தளத்தில் வலைப்பதிவு கணக்கு இருந்து, அதில் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தினால், நான்கிலிருந்து ஐம்பது அழைப்புத் தகுதிகள் உங்களின் ஜிமெயில் மின்னஞ்சலில் இணைக்கப்பட்ட காலம் போய், தற்போது அனைவருக்கும் ஜிமெயில் தொடங்கிய சில நாட்களில் 50 அழைப்புத் தகுதிகள் கொடுக்கப்படுகிறது. சிறப்பம்சங்கள்: புது கணக்கை தொடங்க, அதிக கேள்விகள் கேட்டு தொல்லைப்படுத்தாது. நமக்கு வரும் மின்னஞ்சல்களை நமது அலுவலக மின்னஞ்சல்களுக்கோ அல்லது நாம் அடிக்கடி பார்வையிடும் மற்ற மின்னஞ்சல்களுக்கு Forward செய்யும் வசதி. மின்னஞ்சல்களுக்குள்ளேயே தேடும் வசதி. யுனிகோடு தமிழிலும் சிறப்பாக எழுதலாம், தேடலாம். இணைப்பு கோப்புகள் அனுப்பும்போது ஒவ்

வலைப்பதிவில் எழுத்துரு மேம்பாடு

வலைப்பதிவிற்கு வரும் அனைத்து வாசகர்களுக்கும் ஏற்றவகையில் எழுத்துரு அமைப்பை வலைப்பதிவில் மேம்படுத்துவது நல்லது. இயங்கு எழுத்துரு உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு தேனீ இயங்கு எழுத்துருவை தன் வலைப்பதிவில் இணைத்தவர்களில் சிலர் டெம்ப்லேட் பகுதியில் உள்ள எழுத்துரு குடும்பத்தில் அதன்பெயரை குறிப்பிடாமல் மறந்துவிடுகிறார்கள். யாரெல்லாம் இயங்கு எழுத்துருவை தன் வலைப்பதிவுடன் இணைத்திருக்கிறார்களோ அவர்கள், இணைக்கப்பட்ட எழுத்துருவின் முழு பெயரை டெம்ப்லேட் பகுதியில் உள்ள font-family-ல் குறிப்பிட வேண்டும். உதாரணமாக: font-family: TheneeUniTx; சில அலுவலகங்களில் கணினி பாதுகாப்பிற்காக Geocities போன்ற தளங்களை பார்வையிட முடியாதபடி Firewall உதவிகொண்டு பூட்டிவிடுவதுண்டு. நம்மவர்கள் அதிகமானோர் இயங்கு எழுத்துருவை வைத்திருக்கும் இடம் அதுவே. இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க, குறிப்பிட்ட யுனிகோடு எழுத்துருவை எங்கிருந்து பதிவிறக்கம் செய்யலாம் (உதாரணமாக : Ezhilnila.com) என்பதை, Download Font என்ற சுட்டியை இணைத்து குறிப்பிடலாம். இயங்கு எழுத்துரு உபயோகிக்காதவர்கள் கவனத்திற்கு வின்டோஸ் 98-ஐ உபயோகிக்கும் வாசகர்கள் இண