ஜிமெயில்

சோதனைச்சுற்றுக்காக கூகில் (Google) நிறுவனம் அளிக்கும் இலவச ஜிமெயில் (Gmail) மின்னஞ்சல் கணக்கை, மற்ற இலவச மின்னஞ்சல்களைப் போல் பெற்றுவிட முடியாது.

தற்போது ஜிமெயிலை உபயோகிக்கும் ஒருவர் உங்களுக்கு அழைப்பு (Invitation) கொடுத்தால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், அவ்வாறு அழைப்பு கொடுப்பதற்கான தகுதியும் அவர் பெற்றிருக்க வேண்டும்.

பிளாக்கர் (blogger.com) தளத்தில் வலைப்பதிவு கணக்கு இருந்து, அதில் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தினால், நான்கிலிருந்து ஐம்பது அழைப்புத் தகுதிகள் உங்களின் ஜிமெயில் மின்னஞ்சலில் இணைக்கப்பட்ட காலம் போய், தற்போது அனைவருக்கும் ஜிமெயில் தொடங்கிய சில நாட்களில் 50 அழைப்புத் தகுதிகள் கொடுக்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:

புது கணக்கை தொடங்க, அதிக கேள்விகள் கேட்டு தொல்லைப்படுத்தாது.

நமக்கு வரும் மின்னஞ்சல்களை நமது அலுவலக மின்னஞ்சல்களுக்கோ அல்லது நாம் அடிக்கடி பார்வையிடும் மற்ற மின்னஞ்சல்களுக்கு Forward செய்யும் வசதி.

மின்னஞ்சல்களுக்குள்ளேயே தேடும் வசதி. யுனிகோடு தமிழிலும் சிறப்பாக எழுதலாம், தேடலாம்.

இணைப்பு கோப்புகள் அனுப்பும்போது ஒவ்வொரு இணைப்பு கோப்புகளும் இணைப்பாகும்வரை காத்திருக்க அவசியமில்லை.

பெரிய அளவு கோப்புகளை ஒட்டி அனுப்பலாம்.

ஆயிரம் எம்.பி அளவு என்பதால் வந்திருக்கும் மின்னஞ்சல்களில் எதை அழிப்பது என்பதில் குழப்பமடையத் தேவையில்லை.

POP Access வசதியும் உண்டு. இதன்மூலம் அவுட்லுக்கில் இருந்துக்கொண்டே பயனடையலாம்.

அருமையான கூளதடுப்பான் (Spam) அமைப்பு.

உங்களுக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களை அவ்வப்போது தெரிவிக்கும் Notifier.
படவிளம்பரங்கள் இல்லை. (எழுத்து விளம்பரங்கள் தவிர்த்து)

அழகான முகப்புப் பக்கம் மட்டுமல்லாது உரையாடல் அமைப்பு முறையில் செய்திகளை நமக்கு காட்டுவது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.

இணைப்பில் (Attachments) வந்த மீயுரை (html) தமிழ் யுனிகோடு பக்கங்களை காட்டுவதில் சற்று பிரச்சினை செய்கிறது. மற்றபடி தமிழ் யுனிகோடு செய்திகளை (இணைப்பு செய்யாமல்) விபரம் மற்றும் பொருள் (Subject) பகுதியில் தட்டச்சு செய்து அனுப்பலாம்.

exe கோப்புகளை அனுப்புவதையோ அல்லது பெற்றுக்கொள்வதையோ தடுத்து வைரஸிலிருந்து பாதுகாக்கிறது. தினமும் நூற்றுக்கணக்கான வைரஸ் மின்னஞ்சல்கள் மட்டுமே வருகின்றன என்று குறைப்பட்டுக் கொள்பவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு.

உங்களின் முகவரி புத்தகத்தில், வெளியேறும் மின்னஞ்சல்களின் முகவரிகளை, தன்னிச்சையாக பதித்துவிடுகிறது.

இன்னும் பல...

Comments

Popular posts from this blog

யுனிகோடு உமர் அவர்களின் மறைவு

பாமினி to யுனிகோடு (சீர்மை)