பாமினி to யுனிகோடு (சீர்மை)
Bamini/Sarukesi to Unicode (improved version) பாமினி, சாருகேசி, ரோஜா, சரஸ்வதி, தென்றல், அருவி, ஃபிர்தவ்ஸ், ஜாஸ்மின், சிங்காரம் இன்னும் இதனை ஒத்த பல்வேறு எழுத்துருக்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை யுனிகோடில் மாற்றும்போது ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்துள்ளேன். முக்கியமாக கமா(,) பிரச்சினை இனி இருக்காது. இந்த எழுத்துரு மாற்றிக்கு முன்னோடி நண்பர் சுரதா என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இனி மேலும் பல பாமினி/சாருகேசி எழுத்துரு இணையதளங்கள் யுனிகோடு இணையதளமாக மாற்றம் அடையும் என்று நம்பலாம். கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி எழுத்துருமாற்றியை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் கணினியிலேயே சேமித்தும் பயன்படுத்திக்கொள்ளலாம். இணையதளங்களில் இறக்கி மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். bamini2unicode (Cheermai) இப்புதிய எழுத்துரு மாற்றியின் பயனை அறிந்துக்கொள்ள, கீழ்கண்ட வரியை தனியே இட்டு பாமினி அல்லது சாருகேசி எழுத்துருவாக மாற்றுங்கள். விடை சரியாக வருகிறதா? cs;@hpy;> 'g+l;L"> mt;t+L> ah`{> [{yp> ]{> m/J விடை: உள்ளூரில், 'பூட்டு', அவ்வூடு, யாஹு, ஜுலி, ஸு, அஃது பாமினி/சாருகே...