ஜிமெயில்
சோதனைச்சுற்றுக்காக கூகில் (Google) நிறுவனம் அளிக்கும் இலவச ஜிமெயில் (Gmail) மின்னஞ்சல் கணக்கை, மற்ற இலவச மின்னஞ்சல்களைப் போல் பெற்றுவிட முடியாது. தற்போது ஜிமெயிலை உபயோகிக்கும் ஒருவர் உங்களுக்கு அழைப்பு (Invitation) கொடுத்தால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், அவ்வாறு அழைப்பு கொடுப்பதற்கான தகுதியும் அவர் பெற்றிருக்க வேண்டும். பிளாக்கர் ( blogger.com ) தளத்தில் வலைப்பதிவு கணக்கு இருந்து, அதில் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தினால், நான்கிலிருந்து ஐம்பது அழைப்புத் தகுதிகள் உங்களின் ஜிமெயில் மின்னஞ்சலில் இணைக்கப்பட்ட காலம் போய், தற்போது அனைவருக்கும் ஜிமெயில் தொடங்கிய சில நாட்களில் 50 அழைப்புத் தகுதிகள் கொடுக்கப்படுகிறது. சிறப்பம்சங்கள்: புது கணக்கை தொடங்க, அதிக கேள்விகள் கேட்டு தொல்லைப்படுத்தாது. நமக்கு வரும் மின்னஞ்சல்களை நமது அலுவலக மின்னஞ்சல்களுக்கோ அல்லது நாம் அடிக்கடி பார்வையிடும் மற்ற மின்னஞ்சல்களுக்கு Forward செய்யும் வசதி. மின்னஞ்சல்களுக்குள்ளேயே தேடும் வசதி. யுனிகோடு தமிழிலும் சிறப்பாக எழுதலாம், தேடலாம். இணைப்பு கோப்புகள் அனுப்பும்போது ஒவ்...