யுனிகோட் இணையதளம்
யுனிகோடு உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் ஒர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமே யூனிகோட் ஆகும் இதில் சில இந்திய மொழிகளோடு தமிழுக்கென்றும் தனியிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாம் இன்று பயன்படுத்தும் TSC TAB TAM போன்ற குறியீட்டு வேறுபாடுகளையெல்லாம் தவிர்த்து ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியதும் இந்த யூனிகோட் முறைதான். இந்த யூனிகோட் குறியீட்டின் மூலம் பதிக்கப்பட்ட கதைகளை கவிதைகளை கட்டுரைகளை நாம் Yahoo, google, MSN போன்ற தேடுதளங்களின் மூலம் தமிழிலேயே தேடுகின்ற வாய்ப்பும் நமக்கு கிடைத்திருக்கிறது இத்துடன் இத்தகுதரத்தை உலகிலுள்ள பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களாலும் அங்கீகரிக்க பட்டமையால் இதற்கு வளமான எதிர்காலமுண்டு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இன்றைய நிலையில் யூனிகோட் குறியீட்டினை வின்டோஸ் 2000 மற்றும் வின்டோஸ் Xp இயங்கு தளங்களில் மட்டுமே எளிதாக பயன்படுத்த முடியும். வின்டோஸ் Xp- யுடன் லதா என்னும் யுனிகோடு எழுத்துருவும் சேர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ் யுனிகோட் எழுத்துருவினால் எழுதப்பட்ட பக்கங்களை எந...