Friday, August 05, 2005

சொந்த தளத்தில் பிளாக்கர் பதிவு

சொந்தமாக இணையதளம் தொடங்கும் ஆசை இருந்தாலும் அதற்கான வடிவமைப்பு மற்றும் கட்டுரைகளை வரிசைப்படுத்துதல் போன்றவற்றின் ஏற்படும் சிரமங்கள் உங்கள் ஆசையில் மண்ணை அள்ளிப் போடுமானால், பிளாக்கர் தரும் வசதியை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதன் மூலம் திரட்டி வசதியை எளிதாக பெற்றுக்கொள்வீர்கள்.

ஏற்கனவே பிளாக்கர் வலைப்பதிவுகளை பயன்படுத்தும் நண்பர்கள், (பழைய பதிவுகளுக்கு எந்த நஷ்டமும் வராமல்) அதனை தமது சொந்த தளத்தில் நிறுவமும் இவ்cவழியை பின்பற்றலாம்.

இச்செய்தி html பற்றி அறிந்தவர்களுக்கு புதிய விஷயம் இல்லையென்றாலும், மற்றவர்களுக்கு பயன்படட்டும் என்ற நோக்கில் பதிகிறேன்.

Settings >> Publishing >> via FTP



படத்தை பெரிதாக பார்க்க அதன் மேல் சொடுக்குங்கள்.

திரட்டியை நிறுவ [Site Feed]:


பெட்டகத்தை நிறுவ [Archive]:


குறிப்புகள்:
1) நிறுவும்போது பிரச்சினை ஏற்பட்டால் FTP என்பதற்கு பதிலாக தவறுதலாக SFTP என்பதை தேர்ந்தெடுத்தீர்களா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள். மறக்காமல் FTP-ஐ தேர்ந்தெடுங்கள்.
2) தளத்தின் துணை Directory-யில் நிறுவ விரும்புகிறவர்கள் அதற்கேற்றவாறு மாற்றிக்கொள்ளுங்கள்.
3) FTP password-ஐ சேமிக்கவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. தேவைப்படும்போது அதுவாக உங்களிடம் கேட்டும்.
4) Password-ஐ உங்கள் தளத்தில் சேமித்து வைக்காததால் மற்றவர்களால் மறுமொழி இடமுடியாது என்று நினைக்க வேண்டாம். மறுமொழி இடமுடியும்.
5) உங்கள் பிளாக்கர் டெம்ப்ளேட்டில் உள்ள CSS Script-களை
TopStyle Lite 3.10 -ல் இட்டு வடிவமைப்பை மாற்றியமைக்கலாம்.
6) நிறுவும் முன்பாக தளத்தின் பழைய கோப்புகளை Backup எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
7) வேறு பிரச்சினைகள் எதிர்கொண்டால் மறுமொழியில் தெரிவியுங்கள்.

இவ்வகையில் உருவாக்கப்பட்ட ஒரு தளம்