ஏற்கனவே பிளாக்கர் வலைப்பதிவுகளை பயன்படுத்தும் நண்பர்கள், (பழைய பதிவுகளுக்கு எந்த நஷ்டமும் வராமல்) அதனை தமது சொந்த தளத்தில் நிறுவமும் இவ்cவழியை பின்பற்றலாம்.
இச்செய்தி html பற்றி அறிந்தவர்களுக்கு புதிய விஷயம் இல்லையென்றாலும், மற்றவர்களுக்கு பயன்படட்டும் என்ற நோக்கில் பதிகிறேன்.
Settings >> Publishing >> via FTP

படத்தை பெரிதாக பார்க்க அதன் மேல் சொடுக்குங்கள்.
திரட்டியை நிறுவ [Site Feed]:

பெட்டகத்தை நிறுவ [Archive]:

குறிப்புகள்:
1) நிறுவும்போது பிரச்சினை ஏற்பட்டால் FTP என்பதற்கு பதிலாக தவறுதலாக SFTP என்பதை தேர்ந்தெடுத்தீர்களா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள். மறக்காமல் FTP-ஐ தேர்ந்தெடுங்கள்.
2) தளத்தின் துணை Directory-யில் நிறுவ விரும்புகிறவர்கள் அதற்கேற்றவாறு மாற்றிக்கொள்ளுங்கள்.
3) FTP password-ஐ சேமிக்கவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. தேவைப்படும்போது அதுவாக உங்களிடம் கேட்டும்.
4) Password-ஐ உங்கள் தளத்தில் சேமித்து வைக்காததால் மற்றவர்களால் மறுமொழி இடமுடியாது என்று நினைக்க வேண்டாம். மறுமொழி இடமுடியும்.
5) உங்கள் பிளாக்கர் டெம்ப்ளேட்டில் உள்ள CSS Script-களை
TopStyle Lite 3.10 -ல் இட்டு வடிவமைப்பை மாற்றியமைக்கலாம்.
6) நிறுவும் முன்பாக தளத்தின் பழைய கோப்புகளை Backup எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
7) வேறு பிரச்சினைகள் எதிர்கொண்டால் மறுமொழியில் தெரிவியுங்கள்.
இவ்வகையில் உருவாக்கப்பட்ட ஒரு தளம்
11 comments:
நன்றி.
முன்னரே ஒரு தடவை முயற்சித்துப் பார்த்தேன். சரிவரவில்லை.
உங்கள் உதவியோடு மீண்டும் முயற்சிக்கிறேன். ஏதாவது சந்தேகம் வந்தால் மீண்டும் வருகிறேன்.
//ஏதாவது சந்தேகம் வந்தால் மீண்டும் வருகிறேன்//
நல்வரவு சந்திரவதனா.
ப்ளாக்கரில் பதிவுகளை வகைப்படுத்தும் வசதி (categorise) இருக்கிறதா?
- சலாஹுத்தீன்
நான் புரிந்துக் கொண்டதன்படி, பிளாக்கரில் பயனர் பெயர் மட்டுமே தலைப்பாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அப்பயனர் பெயரில் உருவாக்கப்பட்ட பல வலைப்பதிவுகளை துணைத் தலைப்பாக எடுத்துக்கொள்கிறது. அதனால்தான் ஒரே பயனர் பெயரில் உருவாக்கப்பட்ட பல வலைப்பதிவுகளை Profile view-வில் பார்ப்பீர்கள்.
இதுவல்லாமல் feed2js உதவிக்கொண்டு ஒரே பயனர் அல்லது பல்வேறு பயனர் பெயர்களில் உள்ள வலைப்பதிவுகளை பார்வையாளர்களின் வசதிக்காக :
-- தலைப்பு
-- -- துணைத்தலைப்பு
-- -- -- கடைசியாக பதியப்பட்ட பதிவுகள்
-- -- -- -- தேவைப்பட்டால் பதிவின் சில வரிகள்
என வகைப்படுத்த இயலும்.
நன்றி முஃப்தி!
முஃப்தி அவர்களுக்கு,
நான் முயற்சித்து முதல் மாற்றம் செய்த பின் சேமித்து ரீபப்ளீசு செய்யும் போது
.....There were errors.
001 java.net.UnknownHostException: ftp.puduvaitamizh.blogspot.com/....
என்று வருகிறது.
என்ன செய்யலாம் நண்பரே உதவ இயலுமா?.
தாராளமாக உதவலாம்.
1) உங்கள் சொந்த தளத்தின் url முகவரி.
2) எந்த subfolder-ல் இதனை நிறுவவேண்டும்.
என்ற விபரங்களை தெரிவியுங்கள்.
நன்றி முஃப்தி
//1) உங்கள் சொந்த தளத்தின் url முகவரி.//
http://puduvaitamizh.blogspot.com/
//2) எந்த subfolder-ல் இதனை நிறுவவேண்டும்.//
ftp உதவியைப்பார்த்தேன். இருப்பினும் அதைப்பற்றி தெரிந்தவர் போல அங்கு நடிக்க இயலவில்லை வழிகாட்டுங்கள்.
இரா.சுகுமாரன்
(Once you find this folder name, it will be your path setting, e.g. www/. That may be all you need, if you just want your blog to be at the root level of your server, e.g. at http://www.example.com/myblog.html. (This is assuming you're publishing your blog with a filename of 'myblog.html'.)
If you want your blog in a specific directory, you can just add that to the end of the path, like this: www/blog/. This will publish your blog to a location like this: http://www.example.com/blog/myblog.html. If the given folder does not yet exist on your account, Blogger will go ahead and create it for you. )
Mr.Mufti
இப்போது புதிய குறை தோன்றுகிறது
There were errors.
(001 java.net.ConnectException: Connection refused
Sugumaran
சொந்த தளம் என்று நான் குறிப்பிட்டது, சொந்த இணையதளம் ஆகும்.
தவறாக புரிந்துக்கொள்ளும்படி நான் எழுதியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.
சொந்தமான இணைய தளத்தில், உங்களின் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவுகளை அங்கு தனித்தனி Folder-களில் நிறுவ முடியும்.
இதன் பயன்கள்:
1) தனி டேட்டாபேஸ் தேவையில்லை.
2) சொந்தமான தளத்தில் நிறுவப்படும் பிளாக் சாஃப்ட்வேர்களின் தொழில்நுட்ப பிரச்னைகளை தவிர்க்கலாம்.
நமது சிந்தனைக்கு ஏற்றவாறு இதனை இன்னும் மேம்படுத்த இயலும்.
நன்றி
முஈப்தி
சுகுமாரன்
Post a Comment