1) Weatherreport சொருகு நிரலியை பதிவிறக்கம் செய்த பின்னர், அத்தொகுப்பில் உள்ள NP_Weatherreport.php கோப்பை http://yoursitename.com/yourblogname/nucleus/plugins/ என்ற ஃபோல்டருக்கு பதிவேற்றம் செய்யவேண்டும். weathericon கோப்புகளை பதிவேற்றம் செய்யாமல் தவிர்த்தல் நலம். காரணம் ஒவ்வொரு image கோப்பும் 12 - 40 kb அளவை கொண்டுள்ளது. ஆகையால் பக்கம் திறக்கப்பட தாமதமாகலாம்.
உங்கள் வலைப்பதிவின் மேலாண்மைப் பக்கத்தில் உள்ள "சொருகுநிரல்" சுட்டியை தட்டி Weatherreport நிரலியை நிறுவிய பின்னர் கீழ்கண்டவாறு தெரியும்.
(படம் 10)

படத்தில் உள்ள "விருப்பங்களை மாற்று" என்ற சுட்டியை சொடுக்கினால் பின்வரும் படத்தில் உள்ளதுபோல் பக்கம் திறக்கும்.
(படம் 11)

அம்புகுறி குறிப்பிடும் இடத்தில் உங்கள் நகரம் அல்லது உங்களுக்கு அருகில் உள்ள நகரத்தின் I.D.-ஐ இட வேண்டும். அதற்கு xoap.weather.com என்ற தளத்திற்கு சென்று உங்கள் நகரம் அல்லது நாட்டின் பெயரை இட்டு தேடி, உங்கள் நகரத்தின் வானிலை நிலைய விபர பக்கத்திற்கு சென்ற பிறகு தளத்தின் URL-ஐ காட்டும் ஜன்னலில் கீழ்கண்டவாறு தெரியும்.
உதாரணமாக:
http://www.weather.com/outlook/travel/local/SAXX0011?from=search_city
இதில் கிடைக்கும் இலக்கத்தை (உதாரணமாக SAXX0011) அம்புகுறி குறிப்பிட்ட இடத்தில் இட்ட பின்னர், Name of the City என்ற இடத்தில் மேற்குறிப்பிட்ட I.D. நம்பருக்கு உரித்தான நகரத்தின் பெயரை குறிப்பிடவும். மற்ற விபரங்களை உங்களுக்கு விருப்பமானது போல் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கொடுக்கலாம். பிறகு ஆடைப்பகுதியில் நீங்கள் விரும்பும் பிரிவில்
<%Weatherreport%>
என்று இடவேண்டும். மேலும் விபரங்களுக்கு பதிவிறக்கம் செய்யப்பட்ட .../Weatherreport/readme.txt கோப்பை பார்வையிடுங்கள்.
அடுத்து "புதிதாக நியூக்ளியஸ் வலைப்பதிவு அமைத்தவர்களுக்கு சில யோசனைகள்" என்ற தலைப்பில் சந்திப்போம். அத்துடன் நியூக்ளியஸ் தொடர் முடிந்துவிடும்.
0 comments:
Post a Comment