நியூக்ளியஸ் வலைப்பதிவிற்கு பரவலாக மக்கள் வெவ்வேறு ஆடைகள் அணிவித்தாலும் பார்ப்பதற்கு அழகாக (வண்ணங்களுடன்) காட்சியளிப்பது BlogCMS ஆடைதான்.
இதனைத்தான் நண்பர்கள் நவன், முகுந்த், நான் உட்பட பயன்படுத்துகிறோம். வருகையாளர்களே ஆடையை மாற்றி அழகு பார்க்கும் (ஜீவனுள்ள ஆடை) வசதியும் இதற்கு உண்டு. ஆகையால் இதனை நியூக்ளியஸ் வலைப்பதிவுடன் எப்படி இணைப்பது என்பதை முதலில் பார்ப்போம்.
நியூக்ளியஸ் சி.எம்.எஸ் தளத்தின் ஆடை (Skin) பிரிவில் உள்ள BlogCMS ஆடையை பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும். Unzip செய்த பின் css, gif, png, js ஆகிய கோப்புகளை கீழ்கண்ட ஃபோல்டருக்கு பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.
http://yoursitename.com/yourblogname/skins/base/
(inc கோப்புகளை பதிவேற்றம் செய்வதை தவிர்க்கலாம். காரணம், சில server-களில் அவை இயங்குவதில்லை. ஆகவே அந்த Script-களை ஆடைப்பிரிவில் நாமே இட்டுக்கொள்ளலாம். விபரமாக அடுத்த கட்டுரையில் பார்ப்போம்)
மேலும், NP_CSS.php மற்றும் NP_Calender.php ஆகிய இரண்டு கோப்புகளையும் கீழ்கண்ட (Plugins) ஃபோல்டருக்கு பதிவேற்றம் செய்யவேண்டும்.
http://yoursitename.com/yourblogname/nucleus/plugins/
இப்பொழுது உங்கள் வலைப்பதிவின் மேலாண்மைப் பக்கத்தில் உள்ள "சொருகு நிரல்" சுட்டியை தட்டினால் சொருகுநிரல் மேலாண்மை பக்கத்திற்கு செல்லலாம். இதன் கீழ்பகுதியில் "புதிய சொருகு நிரலை நிறுவு" என்ற பகுதியில், நீங்கள் பதிவேற்றம் செய்த இரண்டு Plugins கோப்புகளும் நிறுவுவதற்கு தயாராக இருக்கும். அதனை கீழ்பகுதியில் தற்காலிகமாக உருவாகியுள்ள Drop down ஜன்னல் வழியே பார்க்க இயலும். அவைகளை ஒவ்வொன்றாக நிறுவ வேண்டும். நிறுவிய பின் Drop down ஜன்னல் தானாக மூடப்பட்டு விடும்.
தற்பொழுது சொருகுநிரல் மேலாண்மைப் பகுதியில் படம் 3 மற்றும் படம் 4-ல் உள்ளது போல் சொருகப்பட்ட நிரலிகளின் விபரங்கள் தெரியும்.
(படம் 3)

(படம் 4)

இனி சொருகப்பட்ட CSS நிரலியில் தெரியும் "விருப்பங்களை மாற்று" (படம் 3-ல் அம்புக்குறி காட்டும் சுட்டி) என்ற சுட்டியை சொடுக்கும்போது அடுத்த படத்தில் உள்ளதுபோல் Option for NP_CSS என்ற பக்கம் திறக்கும்.
இதில் நீங்கள் செய்ய வேண்டிய வேலை ஒன்றே ஒன்றுதான். அதாவது default style என்னவென்பதை தேர்வு செய்யலாம் (படம் 5-ல் அம்புக்குறி காட்டும் பகுதி). உதாரணமாக extreme, czechia, france, choco, blue, simple, techno, green என்பனவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் default style ஆக குறிப்பிட்டு (without .css extension) விருப்பங்களை சேமிக்கவும்.
(படம் 5)

இந்தக் கட்டுரையில் BlogCMS ஆடை அணிவிப்பதற்காக CSS மற்றும் Calendar Plugin-களை எப்படி நிறுவ வேண்டும் என்பதை மட்டுமே பார்த்திருக்கிறோம். மற்ற சில முக்கியமான பணிகளை முடித்தால் மட்டுமே BlogCMS வடிவத்தை உங்கள் வலைப்பதிவில் பார்க்க இயலும்.
இப்பொழுது நியூக்ளியஸ் மேலாண்மைப் பக்கத்தில் உள்ள ஆடை பகுதிக்கு வாருங்கள். ஏற்கனவே உள்ள default ஆடையின் நகலை உருவாக்கினால் default_cloned என்ற ஆடை உருவாகும். பின்பு "மாற்றி அமை" என்ற சுட்டியை சொடுக்கினால் வரும் பக்கத்தில் அதன் பெயரை blogcms என்று மாற்றி அமைத்து சேமித்தால் blogcms புதிய ஆடை உருவாகிவிடும்.
(படம் 6)

ஏற்கனவே Unzip செய்த BlogCMS கோப்பு தொகுப்பினுள் உள்ள skinbackup.xml, articles.inc, footer.inc, header.inc, mylinks.inc, rss.inc, valid.inc கோப்புகளில் உள்ள Script-களை நமது தேவைக்கு தகுந்தவாறு blogcms ஆடையின் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் ஒவ்வொன்றாகத் திறந்து பொருத்த வேண்டும். பிறகு Script-ன் ஊடே உள்ள தலைப்புகளை மொழியாக்கம் செய்யப்பட வேண்டும் (Category - பகுதிகள், Search - தேடல் .... போன்றவை). இதற்கு காரணம், தமிழ் நியூக்ளியஸ் நிரலியை நாம் நிறுவும்போது அதன் உள்ளே மொழியாக்கம் செய்யப்பட்ட Script-கள் இருந்தன. ஆனால் நாம் புதிதாக இணைத்த blogCMS தொகுப்பு, முழுவதும் ஆங்கிலத்தில் இருந்ததால் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும்.
பயனர்களுக்கு தயக்கம் வரக்கூடாது என்பதற்காக Script-களை தனித்தனியாக Text Box மூலம் ஏற்கனவே கொடுத்திருந்தேன். பதிவு செய்யும்போது சில மாற்றங்கள் நடந்து வரிகள் மாறியதோடு மட்டுமல்லாமல் Script-களில் புதுவரிகள் உருவாகிவிட்டது. ஆகவே Text Box-ஐ நீக்கிவிட்டு இப்பொழுது சாதாரண Text கோப்பில் இட்டு இத்துடன் இணைத்திருக்கிறேன். பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இவைகளை உங்கள் வசதிக்கேற்ப இன்னும் மாற்றங்கள் செய்யலாம்.
இனி நீங்கள் செய்ய வேண்டியது
மேலாண்மை பக்கம் சுட்டியை சொடுக்கினால் கீழ்கண்ட படத்தில் உள்ளதுபோல் உங்கள் வலைப்பதிவின் பெயருடன் கூடிய விபரங்கள் தெரியும்.
(படம் 8)

இதில் கொடுக்கப்பட்டிருக்கும் "அமைப்புகள்" என்ற சுட்டியை சொடுக்கினால் (கீழ்கண்ட படத்தில் உள்ளதுபோல்) வரும் பக்கத்தில் "முன்னிருப்பு ஆடையை" blogcms என்று மாற்றி சேமியுங்கள். அவ்வளவுதான் இனி உங்கள் வலைப்பதிவு, உங்களுக்கு விருப்பமான வடிவில் காட்சியளிக்கும்.
(படம் 9)

../skins/base/ பகுதியில் பதிவேற்றம் செய்ய சில இயக்கிகளின் படங்கள்
Weatherreport மற்றும் Latest Posts சொருகு நிரலிகளை நிறுவ சில யோசனைகளை அடுத்த பதிவில் (மிக விரைவில்) வழங்குகிறேன்.
0 comments:
Post a Comment