Friday, November 05, 2004

நியூக்ளியஸ் - யோசனைகள்

புதிதாக நியூக்ளியஸ் வலைப்பதிவு அமைத்தவர்களுக்கு மிக சுருக்கமாக சில யோசனைகள்.

1) வலைப்பதிவு அமைத்த செய்தியை மறக்காமல் தேடுதளங்களுக்கு சொல்லிவிடுங்கள்.

2) Control Panel-ல் sub-domain ஒன்று திறந்து அதனை தட்டுபவர்களுக்கு உங்கள் http://yoursitename/blogpathname/ வந்து சேரும்படி(redirect) செய்யலாம்.

3) யுனிகோடு பயன்படுத்துபவர்கள் அதற்கான encoding செய்வதற்கு எங்கே விபரம் அளிப்பது என்பதை தேடவேண்டாம். UTF-8 என்பதுதான் default encoding. இதனை வார்ப்புருவில் பார்க்கலாம். default ஆடையின் தலைப்பகுதி(head) மற்றும் வார்ப்புரு இவற்றில் குறிக்கப்பட்டுள்ளது. எனவே புது ஆடையை பயன்படுத்துபவர்கள் இதனை கவனத்தில் கொள்ளவும்.
4) ஒரு நியூக்ளியஸில் பல வலைப்பதிவுகள் தொடங்களாம். அதுசரி, அப்படியென்றால் பல (RSS 2.0) திரட்டிகள் தேவைப்படுமே அதற்கு என்ன செய்வது? கவலை வேண்டாம் Default திரட்டியின் பெயருக்கு பிறகு புதிதாக ஆரம்பித்த வலைப்பதிவின் அடையாள எண்ணை (ID) இணைத்தால் காரியம் கைக்கூடும்.

உதாரணமாக:
http://www.islamkalvi.com/blog/xml-rss2.php?blogid=3
அதுமட்டுமல்ல நீங்கள் குறிப்பிட்ட பகுதியின்(Category) விபரங்களுக்கு மட்டும்கூட "திரட்டி" தயாரிக்கலாம். Default திரட்டியின் பெயருக்கு பின்னர் பகுதியின்(Category) அடையாள எண்ணை இட்டு பிறகு வலைப்பதிவின் அடையாளத்தை இட வேண்டும்.
உதாரணமாக: http://islamkalvi.com/blog/xml-rss2.php?catid=1&blogid=1

5) ஆரம்பத்தில் script.js என்ற கோப்பை பதிவேற்றம் செய்துள்ளீர்கள் அல்லவா. அந்த கோப்புதான் Most karma, Most viewed, Hot topics, Latest comments, Latest articles போன்றவற்றை இயக்கும் துணைக் கோப்பு.

இதற்கு Latest comments, Latest articles, Most Popular போன்ற சொருகு நிரலிகள் நிருவப்பட வேண்டும். நிறுவும்போது உங்களின் தேவைக்கு தகுந்தார்போல மாற்றங்கள் செய்துக்கொள்ளலாம். (இதனை ஆடையில் இடுவதற்கான script-கள் articles.inc கோப்பில் உள்ளது).

6)
<!-- shows last 7 articles -->

<%blog(blogcms/short,7)%>


ஆடையின் முகப்பு பகுதியில் இப்படி குறிப்பிடுவதற்கு அர்த்தம், கடைசியாக பதிவு செய்யப்பட்ட 7 பதிவுகளின் சுருக்கத்தினை இடுவது ஆகும். எண்ணிக்கையை உங்கள் விருப்பம்போல மாற்றிக்கொள்ளலாம்.
முகப்பு பக்கத்திலேயே முழு செய்தியும் தெரியவேண்டும் என்று நினைப்பவர்கள் இடுகைப்பக்க Script-ஐ முகப்பு பக்க ஆடையில் இடலாம்.

7) தனது வலைப்பதிவிற்கென்று தனித்தன்மை இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், CSS (Cascading Stylesheets) கோப்புகளை TopStyle Lite 3.10 எடிட்டரைப் பயன்படுத்தி உங்களுக்கென புதிய மாடலை கொண்டுவர இயலும்.

CSS கோப்பினை மாற்றி அமைத்து பதிவேற்றம் செய்த பிறகுதான் அதன் மாற்றத்தை காணமுடியும். (TopStyle viewer-ல் தெரியும் மாற்றத்தினை எளிதாக உணர்ந்துக்கொள்ள முடியாது). அதனைத் தவிர்ப்பதற்கு ஒரு குறுக்கு வழியை கடைப்பிடிக்கலாம்.

a) உதாரணமாக: Blue Dot - Style-லில் இருக்கும்போது உங்களின் வலைப்பதிவை Save as போட்டு Desktop-ல் சேமியுங்கள். (amend.htm என்று சேமிக்கலாம்)
b) நீங்கள் சேமிக்கும்போது வழக்கம்போல இத்யாதி இத்யாதிகள் சேமிக்கப்பட புதிய Folder ஒன்று உருவாகும் (amend_files). அதன் உள்ளே blue.css கோப்பு உருவாகியிருக்கும். அதனை நீக்கி அதற்கு பகரமாக உங்களிடம் உள்ள blue.css கோப்பினை இடுங்கள்.
c) இப்போது TopStyle Lite 3.10 உதவியுடன் உங்களுக்கு தேவையான நிறம், பார்டர், எழுத்தின் அளவு, பக்கத்தின் அளவு, ..... என மாற்றம் செய்யலாம்.
d) amend.htm கோப்பை view செய்து மாற்றத்தினை காண இயலும். நீங்கள் விரும்பிய அமைப்பு வரும்வரை மாற்றி பார்க்கலாம். பிறகு மாற்றப்பட்ட (blue.css கோப்பினை) உங்கள் சர்வரில் (../skins/base/) பதிவேற்றம் செய்யுங்கள்.

இத்துடன் நியூக்ளியஸ் வலைப்பதிவு சம்பந்தமான கட்டுரைகள் முடிகிறது. கட்டுரைக்கு பின்னூட்டம் அளித்து ஆர்வமூட்டிய அனைத்து சகோதரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!.

0 comments: