நியூக்ளியஸ்சிஎம்எஸ் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த தமிழ் நிரலித்தொகுப்பினை Unzip செய்தபின்னர் உங்கள் தளத்தில் ஒரு Folder-ஐ உருவாக்கி FTP மூலம் ASCII mode-ல் பதிவேற்றம் செய்துவிடுங்கள். பதிவேற்றம் செய்வதற்கு முன்னர் readme_tamil மற்றும் இன்னும் பிற உதவி கோப்புகளை படித்துவிடுவது நல்லது.
உங்களின் cpanel-ன் MySql பகுதியில் ஒரு கணக்கு திறக்கப்பட வேண்டும். இதற்கு இணையதள வசதி அளிப்பவரின் உதவி தேவைப்படலாம். பிறகு http://yoursitename.com/blogpath/install.php என்று தட்டச்சு செய்தபின்னர் வரும் பக்கத்தில் வலைப்பதிவு நிறுவ தேவையான விபரங்களை கொடுங்கள்.
பின்னர், http://yoursitename.com/blogpath/ என்று தட்டினால் வலைப்பதிவு திறக்கும். பிறகு 3 அவசியமான வேலைகளை முடித்திட வேண்டும்.
1) நாம் தமிழ் யுனிகோட் பயன்படுத்துவதால் ஏற்படும் RSS 2.0 திரட்டியின் பிரச்சினையை சரிசெய்யத் தேவையான விபரங்களை முகுந்த் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். அங்கு குறிப்பிட்டுள்ள மூன்று பணிகளை முடியுங்கள்.
2) கோப்புகள் பதிவேற்றம் செய்யப்பட Media Folder-க்கு 777 என அனுமதி கொடுக்கப்பட வேண்டும். இதனை installation உதவி பக்கத்தில் விளக்கியுள்ளனர். மேலதிக விபரங்களுக்கு நியூக்ளியஸ்சிஎம்எஸ் மின் மன்றத்தின் உதவியை நாடவும். ஏற்கனவே பலபேர் இதனைப்பற்றி விவாதித்துள்ளனர்.
பிரச்சனை தீரவில்லை என்றால் இலவச image hosting செய்வதற்கு tinypic.com இருக்க நமக்கேன் கவலை. அல்லது உங்கள் சர்வரில் FTP மூலம் படங்களை ஏற்றிக்கொள்ளுங்கள். (புதுமொழி: வல்சுக்கு புல்சும் ஆயுதம்).
3) இயங்கு எழுத்துருக்கான Script ஐ ஒட்ட விரும்பினால் தனி ஃபோல்டர் உருவாக்கி THENEE.eot -யை பதிவேற்றம் செய்யலாம்.
பிறகு நியூக்ளியஸின் மேலாண்மை பக்கத்திற்கு சென்று தோற்ற அமைப்பில் உள்ள ஆடை (Skin) பகுதியை சொடுக்கி Default ஆடையின் துணைப்பிரிவுகளில் (இரண்டு head-களுக்கு இடையில்) இயங்கு எழுத்துருக்கான Script ஐ ஒட்டிவிடுங்கள்.

படம் 1:

../skins/base/ பகுதியில் உள்ள default.css கோப்பில் Font-family: TheneeUniTx, Latha, Tsc_Avarangal......... போன்றவற்றை குறிப்பிடவும். ஏற்கனவே உள்ள ஆங்கில எழுத்துரு பெயர்களுக்கு முன்னதாகவே எழுதிவிடுங்கள். புதியவர்களுக்கும் வல்லுனர்களுக்கும் ஏற்ற TopStyle Lite 3.10 (Cascading Stylesheets) எடிட்டரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அவ்வளவுதான். நீங்கள் இயங்கு எழுத்துருவில் செயல்படும் வலைப்பதிவு உருவாக்கி விட்டீர்கள். நீங்கள் விரும்பினால் default மாதிரி வடிவத்தை மாற்றி வலைப்பதிவின் அழகை கூட்டலாம்.
அவ்வாறு மாற்றி அமைக்க விரும்புகின்றவர்கள் கீழ்கண்டவற்றின் நகலை உருவாக்கி பயன்படுத்துவது சிறந்தது.
1) ஆடை (default)
2) வார்ப்புருக்கள் (default, detailed)
3) default.css
படம் 2: (வார்ப்புரு மேலாண்மை சுட்டிகள்)

உங்கள் வலைப்பதிவை அழகூட்ட blogcms போன்ற ஆடைகள் மற்றும் weather report போன்றவற்றை எப்படி நிறுவுவது என்பதை அடுத்த தொடரில் தருகிறேன். அத்தொடரின் ஊடே மேற்குறிப்பிட்ட விஷயங்களை விபரமாக பார்ப்போம்.
நியூக்ளியல் தமிழ் வடிவ நிரலியின் பயன்கள்:
இதன் பயன்களை நான் சொல்வதைவிட தமிழா குழு சொன்னதை இங்கே கொடுத்து விடுகிறேன்:
//Quote:
1. உலாவர்: இவருக்குத் தேவையான கட்டளைகள், பார்வையிடும் விடயங்கள் அனைத்தும் தமிழில் இருக்கும். எந்த ஒரு உலாவி வழியாகவும் இவர் பயன்பெறலாம். இவருக்குக் தனியான மென்பொருள் அறிவு தேவையில்லை.
2. உறுப்பினர்: கணக்கு வைத்துள்ள பயனர் என்ற நிலையில், இவர் தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் உரிமைகளைப் பொறுத்து, புதிதாக இடுகைகளை இட முடியும், மாற்றி அமைக்க முடியும். இவருக்கும் ஆங்கில அறிவும் தேவையில்லை, மென்பொருள் அறிவும் தேவையில்லை.
Unquote://
இங்கு கொடுக்கப்பட்டவை நியூக்ளியஸின் தமிழ் நிரலியின் பயன்கள் மட்டுமே. தள மேலாளரின் சிந்தனையைப் பொருத்து நியூக்ளியஸ் வலைப்பதிவின் பயன்களை அதிகரிக்க முடியும். இதில் பிரத்யேகமானது நியூக்ளியஸ் தரும் சொருகு நிரலி வசதியாகும்.
குறைகளாக நினைக்கப்படும் நிறைகள்
பரி தனது வலைப்பதிவில் நியூக்ளியஸ் நிரலியின் குறைகளாக சிலவற்றை சொல்லியிருக்கிறார். இவைகளை குறைகளாக பார்க்க வேண்டாம். ஒவ்வொரு நிரலிக்கும் தனித்தன்மை உண்டு. அப்படி எளிமையாக வடிவமைக்கப்பட்ட நிரலிகளில் நியூக்ளியஸ் தரும் வசதிகளை பார்க்க முடியாமல் போகலாம்.
பின்குறிப்பு:
இதில் விடுபட்டிருக்கும் தகவல்களை மறுமொழியின் மூலமாக பார்வையாளர்கள் பதிவு செய்தால், பயனர்களுக்கு மிகுந்த வசதியாக இருக்கும்.
1) yoursitename.com என்பதற்கு பதிலாக உங்கள் தளத்தின் பெயரை இடவும்.
2) blogpath என்பதற்கு பதிலாக உங்கள் வலைப்பதிவு அமைந்திருக்கும் path பெயரை இடவும்
0 comments:
Post a Comment